கோவை மாவட்ட சமூக நலத் துறையில் உள்ள ஒன் ஸ்டாப் சென்டரில் கேஸ் பணியாளர், செக்யூரிட்டி மற்றும் உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்களில் தற்காலிக ஒப்பந்த முறையில் பணியாற்றுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. என்ன பணி, கல்வித் தகுதி, சம்பளம் என்ன உள்ளிட்டவற்றை தெரிந்து கொள்ளலாம்.
பணியிடங்கள் : கோவை மாவட்டத்தில் உள்ள சமூக நலத் துறையில் கேஸ் பணியாளர் (Case Worker), செக்யூரிட்டி, உதவியாளருக்கு ஆட்கள் தேவைப்படுகின்றனர். மொத்த காலி பணியிடம் ஐந்து உள்ளது.
கல்வித்தகுதி : விண்ணப்பதாரர்கள் கேஸ் பணியாளர் பணிக்கு MSW, MA/M.Sc சமூகவியல், MA/M.Sc உளவியல் அல்லது மருத்துவ உளவியல் (பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்) படித்து முடித்திருக்க வேண்டும். அதேபோல, செக்யூரிட்டி மற்றும் உதவியாளர் பணிக்கு 8 ஆம் வகுப்பு பாஸ் அல்லது 10 ஆம் வகுப்பு தேர்வு அடையாதவர்கள் விண்ணப்பிக்காலம்.
சமூக நலத் துறையில் இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் கோவையை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். ஒன் ஸ்டாப் சென்டரில் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணி செய்ய வேண்டியிருக்கும். இப்பணிகளுக்கு 2024 நவம்பர் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 21 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : கேஸ் பணியாளருக்கு மாதம்தோறும் 18 ஆயிரம் ரூபாயும், செக்யூரிட்டிக்கு மாதம்தோறும் 12 ஆயிரம் ரூபாயும், உதவியாளருக்கு மாதம்தோறும் 10 ஆயிரம் ரூபாயும் சம்பளமாக வழங்கப்படவுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது? தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் www.coimbatore.nic.inஎன்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதுதொடர்பான விவரங்களை இந்த இணையதளத்தின் மூலமாகவோ அல்லது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பழைய கட்டடத்தில் உள்ள சமூக நலத் துறை அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.
Read more ; சிறுமியுடன் பலமுறை பலாத்காரம்..!! தாலி கட்டி அடிக்கடி செக்ஸ் டார்ச்சர் கொடுத்த இளைஞர்..!! பகீர் சம்பவம்..!!