fbpx

உருக்குலைந்த காசா!… தண்ணீர் கூட இல்லாமல் 50000 கர்ப்பிணிகள் கடும் அவதி!

ஜெர்மன் தாக்குதலில் இருந்து தப்பி வந்த யூதர்களுக்கு, பாலஸ்தீனர்கள் அடைக்கலம் கொடுத்தனர். ஆனால் அதன் பின்னர் ஐநா சபை 1947ம் ஆண்டு பாலஸ்தீனத்திலிருந்து பாதிக்கும் அதிகமான பகுதியை பிரித்து கொடுத்து இஸ்ரேலை உருவாக்க முடிவெடுத்தது. இதற்கு பாலஸ்தீன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் கடந்த 75 ஆண்டுகளில் காசா, வெஸ்ட் பேங்க் போன்ற சில இடங்களை தவிர மொத்த பாலஸ்தீனத்தையும் யூதர்கள் ஆக்கிரமித்து இஸ்ரேல் எனும் நாட்டை உருவாக்கிக்கொண்டனர். பாதிப்படைந்த பாலஸ்தீனர்கள் தற்போதுவரை இஸ்ரேலுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். பாலஸ்தீன விடுதலையை வலியுறுத்தும் ஹமாஸ் அமைப்பு நடத்திய சமீபத்திய தாக்குதலையடுத்து, இஸ்ரேலும் பதில் தாக்குதலை நடத்தி வருகிறது.

காசா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் நகரம் முழுவதும் உருக்குலைந்து போனது. இதில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர். மேலும், உணவு, தண்ணீர், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி ஏராளமான மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். இதிலும் குறிப்பாக காசா பகுதியில் மட்டும் 50000 கர்ப்பிணி பெண்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகள் அல்லது சுத்தமான தண்ணீரைக் கூட அணுக முடியவில்லை என்றும், அவர்களில் 5,500 பெண்கள் வரும் மாதத்தில் குழந்தை பிரசவிக்க உள்ளவர்கள்ர் என்றும் UNFPA, UN பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

Kokila

Next Post

ஓய்வூதியம் விரைந்து வழங்க சிறப்பு இயக்கம் 3.0 தொடக்கம்...! மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு...!

Fri Oct 13 , 2023
ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை, மத்திய அரசு ஓய்வூதியர் சங்கங்கள், அதனுடன் இணைந்த சங்கங்களுடன் சேர்ந்து, தூய்மையை ஊக்குவித்தல், பொதுமக்களின் குறைகளுக்குத் தீர்வுகாணுதல், டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவித்தல், நல்லாட்சி முயற்சிகள் மூலம் முடிவெடுக்கும் திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக சிறப்பு இயக்கம் 3.0-ன் ஒரு பகுதியாக பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட சிறப்பு இயக்கத்திற்கான முன்கூட்டிய ஆயத்தங்கள், ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறையில் […]

You May Like