நாமக்கல் மாவட்டத்தில் வரும் ஏழாம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் வாயிலாக, படித்து வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு மாவட்ட இயக்க மேலாண்மை அலகு & மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான தனியார் துறை இளைஞர் திறன் மற்றும் வேலை வாய்ப்பு திருவிழா நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டாரம் KSR தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் 07.10.2023 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற உள்ளது.
இந்த இளைஞர் திறன் மற்றும் வேலைவாய்ப்பு திருவிழாவில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இருபாலரும் கலந்து கொண்டு பொருத்தமான நிறுவனங்களை தேர்வு செய்து பயிற்சி மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுக்கொள்ள தெரிவிக்கப்படுகிறது.
மேலும் வேலை வாய்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்ய விரும்புகிற தனியார் நிறுவனங்கள் திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியரகம், கூடுதல் கட்டிடம், நாமக்கல் மாவட்டம் அலுவலக தொலைபேசி எண் 04286 281131க்கு தொடர்பு கொண்டு தங்களது – நிறுவனத்தின் பெயரை 06.10.2023 அன்று மாலை 05.00 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். எனவே, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த வேலையில்லா (ஆண்-பெண் இருபாலரும்) இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.