சென்னையில் தனியார் கல்லூரி பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தொல்லை கொடுத்த பேராசிரியருக்கு தர்ம அடி கொடுத்து மாணவர்கள் போலீசில் ஒப்படைத்தனர்.
சென்னையை அடுத்த படூரில் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் சஞ்சு ராஜூ என்பவர் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இதே கல்லூரியில் பேராசிரியை ஒருவர் பணியாற்றி வரும் நிலையில், பேராசிரியர் சஞ்சு ராஜூ, தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சக பேராசிரியர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பேராசிரியர் சஞ்சு ராஜூவைத் தட்டிக் கேட்ட நிலையில், அவரை தாக்கியுள்ளனர். பின்னர், இதுகுறித்து மாணவர்களுக்கு தெரியவந்த நிலையில், பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் சஞ்சு ராஜூவை புரட்டி எடுத்தனர். பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர்.
அங்கு வந்த போலீசாரிடம் பேராசிரியரை மாணவர்கள் ஒப்படைத்தனர். இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், சஞ்சு ராஜூவைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தனியார் கல்லூரியில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அக்கல்லூரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.