fbpx

கல்லூரி பேராசிரியர் செய்த கேவலமான செயல்; பாத்ரூமில் மாணவி செய்த காரியத்தால் ஏற்பட்ட திருப்பம்..

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வசித்து வருபவர், 45 வயதான சிவப்பிரகாசம். இவர், கல்லூரி ஒன்றில் பேராசிரியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அந்த கல்லூரியில் எம்எஸ்சி படித்த இளம் பெண் ஒருவருக்கு, கோவையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை கிடைத்துள்ளது. இதையடுத்து, அவர் முறைப்படி அவரது சான்றிதழ்கள் அனைத்தையும் கொடுத்து வேலையில் சேர்ந்துள்ளார். பின்னர் அவர் வேலையை விட்டு நின்றுவிட்டார். இந்நிலையில், அவர் வேலை பார்த்த வங்கி நிர்வாகம், அவரது சான்றிதழ்களை கொடுக்க மறுத்துள்ளது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் நின்ற இளம்பெண், தான் கல்லூரியில் படிக்கும்போது தனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் சிவப்பிரகாசம் உதவியை நாடியுள்ளார்.

இந்நிலையில், கடத்த சில நாட்களுக்கு முன்பாக இளம் பெண்ணை தொடர்பு கொண்ட சிவப்பிரகாசம், கோவைக்கு வந்தால் சான்றிதழ்களை வாங்கி தருவதோடு வேறொரு நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகவும் கூறியுள்ளார். தனது ஆசிரியர் கூறுவதை நம்பிய அந்த இளம் பெண், சிவப்பிரகாசம் வீட்டிற்கு சென்றுள்ளார். சிறிது நேரம் இருவரும் பேசிக் கொண்டிருந்த நிலையில், திடீரென சிவப்பிரகாசம் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண், அவரிடம் இருந்து தப்பி வீட்டில் இருந்த குளியல் அறையில் நுழைந்து கதவை பூட்டிக்கொண்டார். மேலும், அவரது தோழி ஒருவருக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை பற்றி கூறியுள்ளார்.

பின்னர் தான் இருக்கும் இடத்தில் லொகேஷனை அவரது தோழிக்கு அனுப்பியுள்ளார். இதையடுத்து, அவரது தோழி, சம்பவம் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து, சம்பவ இடத்திற்கு விரைந்து செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், வடவள்ளி காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இளம் பெண்ணை மீட்டனர். மேலும், பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்த ஆசிரியர் சிவப்பிரகாசத்தை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more: “சித்தப்பா என்ன பண்ண சொன்னாலும், நீ பண்ணனும்”; பள்ளி மாணவியை உடலுறவு கொள்ளுமாறு வற்புறுத்திய தாய்..

English Summary

college-professor-tried-to-sexually-abuse-his-student

Next Post

கடித்து குதறிய தெரு நாய்கள்.. துடிதுடித்து உயிரிழந்த 14 மாத குழந்தை…

Thu Nov 14 , 2024
14-months-old-baby-was-died-after-bitten-by-the-dogs

You May Like