கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் உள்ள குரும்பனை வயல் காலனியில் வசித்து வருபவர் மைக்கேல் ராஜ். மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் இவருக்கு ஒரு மகன் அஜேஷ்குமார் எனபவர் உள்ளார்.
மகன் தற்போது திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். சமீபத்தில், கல்லூரியில் இருந்து திரும்பிய அஜேஷ், தனக்கு படிக்க பிடிக்கவில்லை என்று தனது தாயிடம் கூறிவிட்டு, அடுத்த மாதமே கடலில் மீன்பிடித்து வந்துள்ளார். அப்போது அஜேஷ் தனக்கு புதிய மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு தனது தாயிடம் கேட்டுள்ளார்.
குமாரின் அப்பா இரண்டு நாட்களில் ஊருக்கு வருவார், அவர் வந்ததும் வாங்கித் தருவதாக அம்மா சொல்லியுள்ளார். ஆனால் மனமுடைந்த குமார் நேற்று தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குமாரின் உடலை மீட்டனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.