fbpx

அமெரிக்க விமானத்தை தடுத்து நிறுத்திய கொலம்பியா!. வரியை 50 சதவீதமாக உயர்த்தி டிரம்ப் அதிரடி!

Colombia: அகதிகள் அனுப்பி வைக்கப்பட்ட விமானங்களை தரையிறங்க கொலம்பியா அனுமதிக்காத நிலையில், அந்நாட்டு பொருட்களுக்கு இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை அவர்களுடைய நாட்டுக்கு திருப்பி அனுப்பும் நடவடிக்கையில் ட்ரம்ப் அரசு ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. இந்தநிலையில், கொலம்பியா நாட்டைச் சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கி இருந்தார்கள். அவர்களை தனி விமானம் மூலம் கொலம்பியா நாட்டிற்கு திருப்பி அனுப்பியது.ஆனால் அமெரிக்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட சட்டவிரோத குடியேறியவர்கள் உள்ளடக்கிய இரண்டு விமானங்களை கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ ஏற்க மறுத்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த டிரம்ப் சில அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

இதனை அடுத்து, கொலம்பியாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் அனைத்திற்கும் 25% வரி உயர்த்தி இருப்பதாக டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், ஒரு வாரத்திற்குள் சட்டவிரோத குடியேறியவர்களை ஏற்றுக் கொள்ளாவிட்டால் வரியை 50 சதவீதமாக உயர்த்த உள்ளதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.மேலும், கொலம்பிய அரசு அதிகாரிகள் மற்றும் ஆதரவாளர்களுக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதித்ததோடு, அவர்களது விசாக்களையும் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Readmore: இந்த 7 இடங்களில் வாசனை திரவியங்கள் தடவாதீர்கள்!. சருமத்தில் தொற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம்!. தடுப்பது எப்படி?

English Summary

Colombia stops US plane! Trump takes action by raising tariffs to 50 percent!

Kokila

Next Post

உலகின் மிக உயரமான சிகரம் எவரெஸ்ட் கிடையாது..!! அதை விட 100 மடங்கு பெரிய சிகரம் கண்டுபிடிப்பு..!! அரை பில்லியன் ஆண்டுகள் பழமையானவை..!!

Mon Jan 27 , 2025
Scientists have surprisingly announced the discovery of two peaks 100 times larger than Everest.

You May Like