2004ஆம் ஆண்டு வெளியான 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டம் இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஏம்.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில், ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடித்து சூப்பர் ஹிட்டான படம், 7 ஜி ரெயின்போ காலனி. 2004ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்தார். நா.முத்துக்குமார் பாடல் வரிகளை எழுதினார். படத்தில் இடம்பெற்ற கண்பேசும் வார்த்தைகள் உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. தமிழ், தெலுங்கில் ஒரே நேரத்தில் உருவான இந்தப் படம், பின்னர் சில மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
இந்த நிலையில், ரஜினிகாந்தின் எந்திரன் 2, கமல்ஹாசனின் விஸ்வரூபம், அஜித்குமாரின் பில்லா 2, விக்ரமின் சாமி 2, சுந்தர்.சியின் அரண்மனை 3 பாகங்களை போன்று 7 ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டம் இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் ஏம்.எம்.ரத்னம் தெரிவித்துள்ளார். இரண்டாம் பாகத்தில் அதே நடிகர்கள் நடிப்பார்களா அல்லது புதுமுகங்கள் யாரேனும் நடிப்பார்களா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.