ஒடிசா மாநிலம் சம்பல்பூர் பகுதியில் ஜெராக்ஸ் கடையில் மீதம் 3 ரூபாய் சில்லறை தராததால் பிரபுல்ல தாஸ் என்பவர் நுகர்வோர் நீதிமன்றத்தை நாடி உள்ளார். அவருக்கு ரூ.25,000 இழப்பீடாக அளிக்க கடை உரிமையாளருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒடிசாவின் சம்பல்பூரில், ஜெராக்ஸ் கட்டணமாக பிரபுல்ல தாஸ் என்பவரிடமிருந்து கடை உரிமையாளர் 3 ரூபாய் கூடுதலாக வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் ஜெராக்ஸ் எடுக்க பணம் கொடுத்துவிட்டு மீத சில்லறையை கேட்டதும், ‘பிச்சைக்காரன் கூட 3 ரூபாய் வாங்கமாட்டான்’ என கடைக்காரர் அவமானப்படுத்தியதாக மனுதார் தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
இந்த புகார் மனுவை விசாரணை செய்த மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் கடையின் உரிமையாளருக்கு 25,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அதுமட்டுமின்றி மனுதாரருக்கு கொடுக்க வேண்டிய மூன்று ரூபாயை 30 நாட்களுக்குள் திருப்பி செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.