PHONE PAY, கூகுள்பே உள்ளிட்ட யுபிஐக்கு ரிசர்வ் வங்கி தினசரி பணப் பரிவர்த்தனை அமல்படுத்தப்பட்டால் குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் என்பதால் யுபிஐ செயலிகள் பயனர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இந்தியாவில் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரும் நிலையில் கடந்த 3 ஆண்டுகளாகவே பணப்புழக்கம் குறைக்கப்பட்டு அனைவரும் டிஜிட்டல் முறையில் பணத்தை பரிவர்த்தனை செய்கின்றனர். இதனால், அதிக அளவுக்கு பணம் பரிவர்த்தனை நடக்கின்றது. மக்கள் பெரிய தொகையை கையில் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒரு ரூபாய் முதல் லட்சக்கணக்கில் கூட யுபிஐ செயலியை பயன்படுத்தி பே செய்ய முடிகின்றது.
இந்நிலையில் ரிசர்வ் வங்கி இந்த செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யப்படுவதற்கு குறிப்பிட்ட அளவு நிர்ணயத்துள்ளது. இதனால் செயலிகள் மூலம் பணம் குறிப்பிட்ட அளவுக்குத்தான் பரிவர்த்தனை செய்ய முடியும். இது தொடர்பான பேச்சுவார்த்தை ரிசர்வ் வங்கியுடன் நடைபெற்று வருகின்றது. விரைவில் இது அமல்படுத்தப்படலாம் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக ஐஏஎன்எஸ்- வெளியிட்ட அறிக்கையில் கூகுள்பே, PHONE PAY மற்றும் பிற யு.பி.ஐ. செயலிகளின் பயன்பாடுகளில் பரிவர்த்தனை விதிக்க வேண்டும் என்று என்.பி.சி.ஐ. ரிசர்வ் வங்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. இதன் விளைவாக பயனர்கள் தினசரி வரையறுக்கப்பட்ட தொகையை மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும்.
ஒரே கூடையில் அனைத்து முட்டைகளையும் வைத்தால் என்ன அபாயம் ஏற்படுமோ அதே போல இதில் அபாய காரணிகளை குறைக்கும் முன்னெடுப்பில் என்.பி.சி.ஐ. பரிவர்த்தனை வரம்பை விதிக்க முடிவு செய்துள்ளது. சந்தைப் பங்கில் 80 சதவீதம் PHONE PAY, GOOGLE PAY ஆகியவை இடம்பிடித்துள்ளன. இது செறிவு அபாயத்தை குறைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுளளது.