fbpx

ஜெயிலர் படத்திற்காக விடுமுறை!இலவச டிக்கெட்!… ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த தனியார் நிறுவனம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள ஜெயிலர் படத்திற்காக ஆகஸ்ட் 10ம் தேதி விடுமுறை அறிவித்ததோடு, ஊழியர்களுக்கு பட டிக்கெட்டுகளையும் இலவசமாக வழங்கி தனியார் நிறுவனம் ஒன்று அசத்தியுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்துக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், தமிழகம் மற்றும் பெங்களூருவில் 8 கிளைகளைக் கொண்ட தனியார் நிறுவனம் ஒன்று ‘ஜெயிலர்’ படத்தை தனது ஊழியர்கள் பார்க்கும் வகையில் 10-ம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ரஜினிகாந்தின் ’ஜெயிலர்’ படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப் படத்திற்காக விடுமுறை வேண்டும் என எங்களது HR டிபார்ட்மெண்டுக்கு விடுப்பு விண்ணப்பங்கள் வருவதைத் தடுக்கும் வகையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி விடுமுறை நாளாக அறிவிக்க முடிவெடுத்துள்ளோம். மேலும், பைரஸியை தடுக்கும் வகையில் பணியாளர்களுக்கு படத்தின் டிக்கெட்டுகளை இலவசமாக வழங்குகிறோம்.

இது எங்கள் நிறுவனத்தின் சென்னை, பெங்களூர், திருச்சி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, மாட்டுத்தாவணி, ஆரப்பாளையம் மற்றும் அழகப்பன் நகரில் உள்ள அனைத்து கிளைகளுக்கும் பொருந்தும். நம் தாத்தாவுக்கும், நம் அப்பாவுக்கும், நமக்கும், நம் பிள்ளைகள் மற்றும் பேரன்களுக்கும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான்’ என்று குறிப்பிட்டதோடு ‘ரஜினிகாந்த் வாழ்க’ என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

பேடிஎம் செயலி மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட்!… கட்டண தள்ளுபடியும் உண்டு!... எப்படி டிக்கெட் எடுப்பது?

Sun Aug 6 , 2023
பேடிஎம் செயலி மூலம் மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்கும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பெரு நகரங்களில் மட்டுமே இயங்கி வந்த மெட்ரோ ரயில் சேவை தற்பொழுது சென்னையிலும் தொடங்கப்பட்டு சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை வாசிகளுக்கு மெட்ரோ ரயில் சேவை மிகவும் பிடித்தமான ரயில் சேவையாக மாறியுள்ளது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவே இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிகையை அதிகரிக்க […]

You May Like