கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் ஆரம்பத்திலிருந்தே சரியான முறையில் விசாரணையில்லை..! கமல்ஹாசன்

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த வழக்கில் ஆரம்பத்திலிருந்தே சரியான முறையில் விசாரணை நடைபெறவில்லை என கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி, பிளஸ் 2 படித்து வந்த மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோரும், உறவினர்களும் புகார் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி, ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்கள் நடந்து, மூடி மறைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. துரித நடவடிக்கை எடுக்க காவல்துறை தவறியதால், பெரும் கலவரம் வெடித்துள்ளது. கல்வீச்சில் போலீசார் காயமடைந்ததுடன், பள்ளியும் சூறையாடப்பட்டுள்ளது. பள்ளி வளாகமும், வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் ஆரம்பத்திலிருந்தே சரியான முறையில் விசாரணையில்லை..! கமல்ஹாசன்

எனவே, இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்ந்திருந்தால், அது தொடர்பாகவும் உரிய விசாரணை மேற்கொண்டு, தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதே மக்களை அமைதிப்படுத்தும். போராட்டம் என்ற பெயரில் பெரும் வன்முறை நடந்துள்ளதை ஏற்க முடியாது. மாணவியின் பெற்றோர் கூறிய குற்றச்சாட்டுகளை அலட்சியப்படுத்தியிருக்கக் கூடாது. கலவரத்துக்குப் பின்னர் மேற்கொண்ட கைது நடவடிக்கைகளை முன்னரே எடுத்திருக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் ஆரம்பத்திலிருந்தே சரியான முறையில் விசாரணையில்லை..! கமல்ஹாசன்

இந்த விவகாரத்தில் ஆரம்பத்திலிருந்தே சரியான முறையில் விசாரணை நடைபெறவில்லை. தவறான பாதையில் பயணிக்கிறது என்பதே மக்களின் கோபத்துக்குக் காரணம். சிறு பிரச்சனைக்குக் கூட தற்கொலை செய்துகொள்வதும், சக மாணவியையே பாலியல் பலாத்காரம் செய்வதும், ஆசிரியர்களைத் தாக்குவது போன்ற செயல்களும் வேதனையளிக்கின்றன. அரசுப் பள்ளியோ, தனியார் பள்ளிகளோ, அரசின் கட்டுப்பாட்டில் இருந்து கைநழுவுகின்றனவோ? பிரச்சனைகள் ஏற்படும் ஒவ்வொரு முறையும், இனியும் இதுபோன்று நிகழாமல் பார்த்துக் கொள்வோம் என்று கூறுவதும், மீண்டும் மீண்டும் சிக்கல்கள் ஏற்படுவதும் தொடர் கதையாகிவிட்டது. புத்தகக் கல்வியுடன், தன்னம்பிக்கை, தைரியம் வளர்க்கும் கருத்துகளையும், நெறிமுறைகளையும் கற்றுத்தர வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கில் ஆரம்பத்திலிருந்தே சரியான முறையில் விசாரணையில்லை..! கமல்ஹாசன்

மாணவ, மாணவிகளின் பிரச்சனைகள், நெருக்கடிகளைத் தெரிந்துகொள்ளவும், அவர்களுக்குக் கவுன்சிலிங் அளிக்கவும் பிரத்யேகக் குழுவை அமைக்க வேண்டும். அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் அரசின் விதிமுறைகள், நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வுகாண தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்”. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்..! மருத்துவமனையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை..!

Tue Jul 19 , 2022
கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த வழக்கில் மருத்துவமனையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடல் மறுஉடற்கூராய்விற்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இதற்காக உயர்நீதிமன்றம் அமைத்துள்ள மருத்துவ குழு மருத்துவமனைக்கு வந்துள்ளது. ஆனால், மாணவியின் பெற்றோர் உள்ளிட்ட யாரும் அங்கு வரவில்லை. தங்கள் தரப்பு மருத்துவரையும் குழுவில் இடம்பெற செய்ய வேண்டும் என்று அவர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர். இதனால் உடற்கூராய்வு இன்று நடைபெறுமா? நடைபெறாதா? […]
கள்ளக்குறிச்சி கலவரம்..! ட்விட்டர் நிறுவனத்தை அணுகிய மாவட்ட காவல்துறை..! எதற்காக தெரியுமா?

You May Like