fbpx

பொங்கல் பரிசுத் தொகுப்பு வரவில்லையா…? 1967 என்ற இலவச எண்ணில் புகார் செய்யுங்கள்…!

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் சம்பந்தப்பட்ட புகார்கள் ஏதேனும் இருப்பின் இலவச எண் மூலம் புகார் அளிக்கலாம்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை, முழு நீள கரும்புடன், 1000/- ரொக்கப்பணம் வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொங்கல் பரிசுத்தொகுப்பை பெறுவதற்காக குடும்ப அட்டைதாரர்கள் ஒரே நேரத்தில் நியாய விலைக் கடைகளுக்கு வருகை புரிவதை தவிர்ப்பதற்காக குடும்ப அட்டைதாரர்களுக்கு அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் பொங்கல் தொகுப்பு மற்றும் ரொக்கப் பணம் வழங்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் விற்பனை முனைய இயந்திரம் மூலம் கைரேகை சரிபார்ப்பு முறை மூலம் வழங்கப்படும்.

குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள உறுப்பினர்களில் யார் வேண்டுமானாலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப்பணத்தை டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் சம்பந்தப்பட்ட புகார்கள் ஏதேனும் இருப்பின் அதனை 1967, 18004255901 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தெரிவிக்கலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

சென்னையில் தொடரும் சோகம்!… எருமை மாடு முட்டியதில் முதியவர் பலி! சாலையில் நடந்து செல்ல அச்சப்படும் மக்கள்!…

Wed Jan 10 , 2024
சென்னை நங்கநல்லூரில் சாலையில் நடந்து சென்றபோது எருமை மாடு முட்டியதில் முதியவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை நங்கநல்லூர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா காலனி பகுதியை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியர் சந்திரசேகர். இவர், நேற்றுமாலை சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்தபோது, அங்கு சண்டையிட்டுக்கொண்டிருந்த எருமை மாடுகள் திடீரென சந்திரசேகரை முட்டி தள்ளின. இதில் படுகாயங்களுடன் மயங்கிவிழுந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு […]

You May Like