தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்த பிரபல நடிகர் கைகலா சத்யநாராயணா காலமானார்.
உலகநாயகன் கமல்ஹாசனின் ‘பஞ்சதந்திரம்’ படத்தில் ஸ்ரீமனின் மாமனாராக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கைகலா சத்ய நாராயணா. பெரியார் படத்தில் பெரியாரின் தந்தை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். தெலுங்கில் 750-க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன், குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். கடைசியாக 2019-ல் வெளியான மகேஷ்பாபுவின் மகிரிஷி படத்தில் நடித்து இருந்தார்.
இந்நிலையில், சிறிது காலமாகவே உடல்நிலை சரியில்லாமல் நடிகர் கைகலா சத்யநாராயணா அவதிப்பட்டு வந்தார். அவ்வப்போது மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று அதிகாலை அவர் காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.