5000 வருடங்களுக்கு முன்பே தேன், மணல், முதலை சாணியை வைத்து காண்டம் கண்டு பிடிக்கப்பட்ட ஆச்சரியமான தகவல்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் ஆணுறை என்பதே பால்வினை நோய் ஏற்படாமல் இருக்க கண்டுபிடிக்கப்பட்ட ஒரு உபகரணம் தான். ஆனால், தொழில்நுட்பத்தில் அப்டேட் வருவது போல தான் இதிலும் அவ்வப்போது சில புதிய நன்மை அல்லது சிறந்த முறை என்று ஆணுறைகள் சந்தையில் புதிய பெயர்களில் அறிமுகப்படுத்தி வருகிறார்கள்.
எத்தனை புதுமையாக இருப்பினும், தரம் உயர்வாக இருப்பினும் சில சமயங்களில் ஆணுறை பயன்படுத்தியும் கூட பால்வினை நோய் தொற்று ஏற்பட்டவர்கள் இருக்கிறார்கள். இதை தடுக்கவும், மேலும் பரவாமல் இருக்கவும் ஆய்வாளர்கள் நிறைய ஆய்வுகள் நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில், எகிப்தியர்களின் வித்தியாசமான விஷயங்களில் ஒன்று 5000 வருடங்களுக்கு முன்பே காண்டம் கண்டு பிடித்திருக்கிறார்கள். ஏனென்றால் அந்த காலத்தில் மக்கள் தொகை அதிகமாக இருந்திருக்கிறது. இதனால் மக்கள் தொகையை குறைப்பதற்காக காண்டத்தை கண்டு பிடுத்து பயன்படுத்தி இருந்திருக்கிறார்கள். இதற்கு அவர்கள் பயன்படுத்திய பொருள்களை கேட்டால் அசந்து போவீர்கள். தேன், மணல், முதலை சாணி இந்த மூன்று பொருள்களையும் பயன்படுத்தி ஒரு பேஸ்ட் தயாரித்திருக்கிறார்கள். இதனை அவர்கள் பயன்படுத்திய விதத்தை பார்த்தால் மிகவும் ஆச்சர்யமாக இருக்கும். பெண்கள் தான் இந்த பேஸ்ட்யை தங்கள் அந்தரங்க உறுப்பில் தடவி கர்ப்பமாவதை கட்டுப்படுத்தி இருந்திருக்கிறார்கள்.