fbpx

தலைமை ஆசிரியர் அறையில் ஆணுறை, மதுபாட்டில்கள்..!! பாய்ந்தது நடவடிக்கை..!! பரபரப்பு சம்பவம்..!!

மத்தியப்பிரதேசம் மாநிலம் தனியார் பள்ளி ஒன்றில் மாவட்ட கல்வி அதிகாரி ஏ.கே. பதக் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தலைமை ஆசிரியரின் அறைக்குள் மதுபாட்டில்கள், ஆணுறைகள் மற்றும் பிற சட்டவிரோத பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அப்பள்ளிக்கு சீல் வைக்கப்பட்டது. இதுகுறித்து மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் டாக்டர் நிவேதிதா சர்மா, பள்ளியின் முதல்வர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்துள்ளார்.

மேலும், வெளிநாட்டு மதுபாட்டில்களை வைத்திருந்த குற்றத்திற்காக, அந்த பள்ளியின் தலைமையாசிரியர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. பள்ளிகளில் குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதிப்படுத்த கடுமையான நடவடிக்கைகளின் அவசியத்தை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

Chella

Next Post

காதலிக்க மறுத்த இளம்பெண்..!! கத்தியால் குத்தி சாய்த்த கொடூரம்..!! ஒருதலை காதல் விபரீதம்..!!

Sun Mar 26 , 2023
கோவை மாவட்டம் பிள்ளையார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ரேஷ்மா (19). இவர், அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு படிப்பை விட்டு விட்டு சுந்தராபுரம் பகுதியில் உள்ள கனி டிராவல்ஸ் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், குடியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம் ரேஷ்மாவை காதலித்து வந்துள்ளார். இதற்கிடையே, ரேஷ்மா பணிபுரியும் கனி டிராவல்ஸ் நிறுவனத்திற்கு சென்ற ஸ்ரீராம் தன்னை காதலிக்கும்படி ரேஷ்மாவிடம் […]
காதலிக்க மறுத்த இளம்பெண்..!! கத்தியால் குத்தி சாய்த்த கொடூரம்..!! ஒருதலை காதல் விபரீதம்..!!

You May Like