fbpx

குடிசை மாற்று வாரிய வீடு ஒதுக்கீடு செய்வதாக, 1.20 லட்சம் ரூபாயை ஏமாற்றிய காங்கிரஸ் கவுன்சிலர்..!

குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கீடு செய்து தருவதாக கூறி 1,20,000 ரூபாய் ஏமாற்றிய கோவை மாநகராட்சி கவுன்சிலர் சங்கர் மீது மாநகர காவல் ஆணையாளரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை சின்னியம்பாளையம் ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்தவர்கள் பாலசுப்பிரமணியன்- லதா தம்பதியினர். இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு சொந்த வீடு இல்லாததால், செல்வபுரம் குடுசைமாற்று வாரியத்தில் வீடு வேண்டி தெற்கு வட்டாட்சியர் வருவாய் அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணிபுரியும் பூசாரிபாளையம் பகுதியை சேர்ந்த தம்பு (எ) திருமகன் என்பவரை அணுகியுள்ளனர்.

அப்போது அவர் இதற்காக 1,20,000 ரூபாய் கொடுக்க வேண்டும் எனவும், மாநகராட்சி 74-வது வார்டு கவுன்சிலர் சங்கர்(காங்கிரஸ்) மூலம் வீடு ஒதுக்கீடு செய்து பெற்றுத் தருவதாக தெரிவித்ததாக கூறியுள்ளார். இதனை நம்பி 2022ம் ஆண்டு பூசாரிபாளையத்தில் உள்ள கவுன்சிலர் அலுவலகத்தில் வைத்து திருமகன் முன்னிலையில் கவுன்சிலர் சங்கரிடம் 1,20,000 ரூபாய் கொடுத்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து நீண்ட நாட்களாக வீடு ஒதுக்கீடு செய்து தராததால் கவுன்சிலர் சங்கரிடமும் திருமகனிடமும் கேட்ட பொழுது கவுன்சிலர் சங்கர் அவரது லெட்டர் பேடில் சட்டமன்ற உறுப்பினராக உள்ள செல்வப்பெருந்தகைக்கு பணிந்துரை கடிதம் எழுதிய நகலையும் செல்வப்பெருந்தகை அமைச்சர் அன்பரசன் யிடம் வீடு கேட்டு பரிந்துரை செய்த நகலை கொடுத்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து வீடு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து வந்த நிலையில் இன்றுவரை வீட்டையும் ஒதுக்கீடு செய்து தராமல் பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வருவதுடன் தங்களை ஆள் வைத்து மிரட்டுவதாக கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் லதா புகார் அளித்துள்ளார். மேலும் தங்கள் பணத்தை திரும்ப பெற்று தருமாறும் தங்களையும் குடும்பத்தையும் மிரட்டுவதால் மிகுந்த அச்சமாக உள்ளதாக கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

Kathir

Next Post

IPL 2024 | "டி20 உலக கோப்பையில் இந்தியாவிற்காக விளையாட விரும்புகிறேன்…" தினேஷ் கார்த்திக் அதிரடி பேட்டி.!!

Sat Apr 20 , 2024
IPL 2024: ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் வைத்து நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா அணிக்காக விளையாட விரும்புவதாக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். 2024 ஆம் வருட ஐபிஎல்(IPL 2024) தொடர் தற்போது பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை நடந்து முடிந்த ஆட்டங்களில் 12 புள்ளிகளுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதல் இடத்திலும் தலா 8 புள்ளிகள் உடன் கொல்கத்தா […]

You May Like