fbpx

பரபரப்பு சம்பவம்: “கூட்டணிக்குள் அடிதடி..” மேயர் மீது கொலை முயற்சி.! காங்கிரஸ் கவுன்சிலருக்கு வலைவீச்சு.!

கன்னியாகுமரி மாவட்ட தலைநகரான நாகர்கோவில் மாநகராட்சியின் மேயரை கார் ஏற்றி கொலை செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கூட்டணி கட்சியைச் சார்ந்த மேயரை கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்து வருவதோடு நாகர்கோவில் மாநகராட்சி மேயராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் தன்னை கார் ஏற்றி கொலை செய்ய முயற்சித்ததாக காங்கிரஸ் கட்சியின் 44-வது வார்டு கவுன்சிலராக இருக்கும் நவீன் என்பவர் மீது கொலை முயற்சி புகார் பதிவு செய்துள்ளார்.

தனது உதவியாளருடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு நின்று கொண்டிருந்தபோது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் நவீன் கார் ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்ததாக மேயர் தெரிவித்து இருக்கிறார். மேலும் இது தொடர்பாக தனது உதவியாளர் கேட்டபோது அவரிடம் கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 44-வது வார்டு கவுன்சிலர் நவீன் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தலைமறைவாக இருக்கும் அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியும் திமுகவும் கூட்டணி கட்சிகளாக இருக்கும் நிலையில் திமுக மேயரை காங்கிரஸ் கவுன்சிலர் கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

தை பொங்கல்: இந்த நேரங்களில் மறந்தும் பொங்கல் வைக்காதீர்கள்.! ஜோதிட வல்லுநர்களின் அறிவுரை.!

Sat Jan 13 , 2024
வருகின்ற 15-ம் தேதி தைத்திங்கள் ஒன்றாம் நாள் தமிழகம் முழுவதும் மட்டுமல்லாது உலகத் தமிழர்களும் பொங்கல் பண்டிகையை விமர்சையாக கொண்டாட இருக்கிறார்கள். இந்தப் பண்டிகை சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் விதமாக கொண்டாடப்படுவதோடு விவசாயிகளுக்கு மரியாதை செலுத்தும் பண்டிகையாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்கள் ஜாதி மத பேதமின்றி பொங்கல் பண்டிகையை கலாச்சார பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். பொங்கல் பண்டிகையின் போது அதிகாலை நேரத்தில் சூரிய பகவானை தொழுது மண்பானைகளில் பொங்கல் […]

You May Like