fbpx

ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் மீது பாலியல் அவதூறு.! காங்கிரஸ் பிரமுகர் அதிரடி கைது.!

உத்தரப்பிரதேச மாநில அயோத்தியில் புதியதாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான ராமர் கோயிலுக்கு அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளவர் மீது அவதூறுகளை பரப்பியதாக காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த பிரமுகர், கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் பிரம்மாண்டமாக ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ராமர் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. மூன்று அடுக்குகளாக கட்டப்பட்டிருக்கும் இந்த ராமர் கோவிலின் பிரம்மாண்டமான திறப்பு விழா வருகின்ற ஜனவரி மாதம் நடைபெற இருக்கிறது.

புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு தலைமை அர்ச்சகராக மோகித் பாண்டே என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகர் பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார் குஜராத்தை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர்.

இது தொடர்பாக புகாரளிக்கப்பட்ட நிலையில் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரான ஹிதேந்திர பிதாடியா என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகரை பற்றி அவதூறு பரப்பியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Post

ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!! பொங்கல் பண்டிகை களைகட்ட போகுது..!!

Wed Dec 13 , 2023
தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், “செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகள் கண்டறியப்பட்டு தாலுகா வாரியாக நிவாரணம் வழங்கப்படும். வரும் 16ஆம் தேதி முதல் நிவாரண தொகைக்கான டோக்கன்கள் வழங்கப்படும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில், வீட்டுக்கடன் செலுத்துவோரின் சிரமம் குறித்து ஆலோசித்து வருகிறோம். அதற்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும். மின் பயன்பாடு கணக்கு அட்டை சேதமடைந்திருந்தால், சம்பந்தப்பட்ட மின் வாரிய […]

You May Like