fbpx

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் ராகுல் காந்தி..!! தீர்மானம் நிறைவேற்றம்..!!

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என ராஜஸ்தான் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம், அம்மாநில முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான அசோக் கெலாத் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முக்கியமான தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு அவை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், முக்கிய முடிவாக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநில தலைவர்களை நேரடியாக நியமிக்க அதிகாரம் கொண்டவராக இருக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் ராகுல் காந்தி..!! தீர்மானம் நிறைவேற்றம்..!!

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வரக்கூடிய நிலையில், பல்வேறு மாநில காங்கிரஸ் கமிட்டிகள் சார்பாக தீர்மானங்கள் நிறைவேற்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மற்றொரு பக்கம் பாரத் ஜூடோ பயணத்தை ராகுல் காந்தி பத்து நாட்களை கடந்து கலந்துகொண்டு வருகிறார்.

Chella

Next Post

2-வது திருமணம்..! கணவனுக்கு செருப்பு மாலை அணிவித்து சரமாரி அடி கொடுத்த முதல் மனைவி..!

Sun Sep 18 , 2022
தன்னை விட்டு பிரிந்து 2-வது திருமணம் செய்த கணவரை அவரது முதல் மனைவி மின் கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கி செருப்பு மாலை அணிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் பெத்தப்பள்ளி மாவட்டம் ஸ்வர்ணபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் அகிலா (28). இவருக்கும் ஸ்ரீகாந்த் (33) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது அகிலாவின் பெற்றோர் ஸ்ரீகாந்துக்கு வரதட்சணையாக ரூ.20 லட்சம் கொடுத்துள்ளனர். இவர்களுக்கு […]
2-வது திருமணம்..! கணவனுக்கு செருப்பு மாலை அணிவித்து சரமாரி அடி கொடுத்த முதல் மனைவி..!

You May Like