fbpx

தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி..! தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு..!

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தல் ஏற்கனவே நடைபெற்ற நிலையில், இன்று தெலங்கானா மாநிலத்தில் ஒரே கட்டமாக இன்று சட்டசபைத் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.

அதன்படி தெலுங்கானா ஆந்திர மாநிலத்தில் இருந்து பிரிந்து வந்ததில் இருந்து சந்திரசேகா்ராவ் தலைமையிலான ஆளும் பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆா்.எஸ்.) கட்சி இரண்டு முறை ஆட்சி செய்து வருகிறது. அங்கு மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைக்க போராடி வருகிறது சந்திரசேகா்ராவ் தலைமையிலான பி.ஆா்.எஸ். கட்சி. பிஆர்எஸ், காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. 2018 இல் பி.ஆா்.எஸ். 119 இடங்களில் 88 இடங்களை வென்றது மற்றும் 47.4 சதவீத வாக்குகளைப் பெற்றது. காங்கிரஸ் 19 இடங்களைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

தற்போதைய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. அதில் cnn கருத்துக்கணிப்பு படி, தெலுங்கானாவில் ஆளும் பி.ஆா்.எஸ். மற்றும் காங்கிரஸ் இடையே இழுபறி நீடிக்கும் என்பதையே காட்டுகிறது. மேலும் tv9 மற்றும் ஜன் கி பாத், கருத்துக்கணிப்பு படி தெலுங்கானாவில் ஆளும் பி.ஆா்.எஸ். கட்சியை வீழ்த்தி காங்கிரஸ் ஆட்சி அமைக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

  1. cnn-news18 : பி.ஆா்.எஸ்.= 58, காங்கிரஸ்= 56, பாஜக= 10.
  2. tv9 : பி.ஆா்.எஸ்.= 48 – 58, காங்கிரஸ்= 49 – 59, பாஜக= 05 – 10.
  3. ஜன் கி பாத் : பி.ஆா்.எஸ்.= 40 -55, காங்கிரஸ்= 48 – 64, பாஜக= 07 -13, எ.ஐ.எம்.ஐ.எம்.= 04 – 07.

Kathir

Next Post

பெண்கள் ஏன் தேங்காய் உடைக்கக்கூடாது தெரியுமா?… சாஸ்திரங்கள் கூறுவது என்ன?

Thu Nov 30 , 2023
தேங்காய் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது, மேலும் இது ஒவ்வொரு மத சடங்குகளிலும் பயன்படுத்தப்படுகிறது. எந்த பூஜையாக இருந்தாலும், தேங்காய் கண்டிப்பாக கடவுளுக்கு சமர்பிக்கப்படுகிறது. எந்த ஒரு சுப காரியத்திற்கும் முன் தேங்காய் உடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது. காலங்காலமாக இருந்து வரும் இந்த நம்பிக்கை இந்து மதத்தில் மிகவும் புனிதமானதாகவும் முக்கியமானதாகவும் கருதப்படுகிறது. சாஸ்திரங்களில், பெண்கள் சில பணிகளைச் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது; அவற்றில் ஒன்று தேங்காய் உடைப்பது, […]

You May Like