குஜராத்தில் நடைபெற உள்ள தேர்தலில் காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது என்று ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் கிண்டலாக பேசியுள்ளார்.
குஜராத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 1-ம் தேதி நடைபெற உள்ளது. 2 கட்டமாக நடத்தப்பட உள்ள தேர்தலில் முதலில் 83 தொகுதிகளுக்கும் பின்னர் 77 தொகுதிகளுக்கும் நடத்தப்பட உள்ளது. இதனால் குஜராத்தில் மும்முனைப்போட்டி நிலவி வருகின்றது. இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரஸ் கட்சியை கிண்டல் செய்யும் விதமாக பேசியுள்ளார்.
அவர் கூறுகையில், ’‘மிகவும் பழமைவாய்ந்த காங்கிரஸ் கட்சியை யாரும் சீரியசான கட்சியாக கருதவில்லை. இத்தேர்தலில் 5 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது, யார் காங்கிரஸ் கட்சியை சீரியசாக எடுத்துக் கொண்டது?’’ என கேள்வி எழுப்பினார்.
’’ குஜராத் மக்களுக்கு மாற்றம் தேவை. மக்கள் மாற்றத்தை விரும்பவில்லை என்றால் நம்மால் எந்த ஒரு இடத்தையும் பெற முடியாது. நாங்கள் 30 சதவீதம் வாக்குகள் பகிர்வோம். பஞ்சாபில் ஆட்சி அமைத்துள்ளோர். குஜராத்தை போலவே ஆட்சி அமையும் என்றார். எழுத்துபூர்வமாகக் கூட எழுதிக்கொடுக்கத் தயார். 5 இடங்களைக் கூட பெறாது. 5க்கும் குறைவாகவே வெற்றி பெறும்.’’ என்றார்.
நடைபெற உள்ள தேர்தலில் 160 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை ஆளும் பாஜக அறிவித்திருந்த நிலையில் தற்போது 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. கடந்த 2017 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற பின்னர் அங்கிருந்து பாஜகவுக்கு அணி மாறிய எம்.எல்.ஏ.-க்களுக்கும், முக்கிய புள்ளிகளுக்கும் பாஜக இம்முறை தேர்தலில் வாய்ப்பளித்துள்ளது.