அதிமுக முன்னாள் அமைச்சர்களின் வாகனம், அடுத்தடுத்து விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழா, 60-வது குருபூஜை விழா ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவர் குருபூஜை விழாவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் மற்றும் பலரும் அவரது சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பசும்பொன் சென்றுகொண்டிருந்தனர். மானாமதுரை அருகே சென்றபோது முன்னாள் சென்ற வாகனம் திடீரென பிரேக் அடித்ததால் அமைச்சர்கள் பாஸ்கரன் மற்றும் காமராஜ் சென்ற வாகனம் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானது.
![அடுத்தடுத்து மோதல்..!! கார் விபத்தில் சிக்கிய அதிமுக முன்னாள் அமைச்சர்கள்..!! மருத்துவமனையில் சிகிச்சை..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/10/sadasfafff.jpg)
இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பாஸ்கரன், காமராஜ் சென்ற கார்கள் உட்பட 6 கார்கள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் திருவாரூரைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.