fbpx

பெண் ஏடிஜிபி அறையில் நிகழ்ந்த தீ விபத்துக்கு சதித்திட்டம் காரணம் அல்ல…! டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம்…!

தனது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நோக்கில் தனது அறையில் தீ வைக்கப்பட்டதாக ஏடிஜிபி எழுப்பிய குற்றச்சாட்டை டிஜிபி மறுத்துள்ளார். மேலும், பெண் ஏடிஜிபி அறையில் நிகழ்ந்த தீ விபத்துக்கு சதித்திட்டம் காரணம் அல்ல என விளக்கம் அளித்துள்ளார்.

இது குறித்து விளக்கமளித்து டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்ட செய்திக்குறிப்பில் ; கடந்த ஆண்டு ஆக்டோபர் 14-ம் தேதி கூடுதல் டிஜிபி கல்பனா நாயக்கிடம் இருந்து கடிதம் வந்தது. அது தொடர்பாக உடனடியாக விசாரிக்க சென்னை காவல் துறைக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக எழும்பூர் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். திருவல்லிக்கேணி காவல் மாவட்ட துணை ஆணையர், தடயவியல் துறை நிபுணர்கள், தமிழ்நாடு தீயணைப்புத் துறை அதிகாரிகள், தமிழ்நாடு காவல்துறை வீட்டு வசதி கழகத்தின் தொழில்நுட்ப பிரிவு மற்றும் தனியார் ஏர்கண்டிஷன் நிறுவன நிபுணர்கள் அங்கு ஆய்வு மேற்கொண்டனர்.

பின்னர் இதுதொடர்பான வழக்கு விசாரணை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்டது.‌ இதனிடையே நிபுணர்கள் குழு அளித்த அறிக்கையில், அறையில் உள்ள காப்பர் வயர்கள் மூலம் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பெட்ரோல், டீசல் போன்ற எளிதில் தீப்பிடிக்க கூடிய எந்த எரிபொருளும் அறையில் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. எனவே கூடுதல் டிஜிபி கல்பனா நாயக்கின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்தவித சதித் திட்டமும் இல்லை என்று நிபுணர் குழுவினர் தெரிவித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

English Summary

Conspiracy not the cause of the fire in the female ADGP’s room

Vignesh

Next Post

சொத்துக் குவிப்பு..!! அமைச்சர் பொன்முடி வழக்கில் இறுதி விசாரணை..!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

Tue Feb 4 , 2025
A review petition has been filed against the release of Minister Ponmudi. The Chennai High Court has said that the final hearing of the case will be held from April 7th.

You May Like