fbpx

யானைகளை காவு வாங்கும் மின்வேலி!… மின்வாரியத்திற்கு கடும் எச்சரிக்கை விடுத்த ஐகோர்ட்!

High Court: மின் வேலிகளில் சிக்கி யானைகள் உயிரிழப்பு தொடரும் பட்சத்தில், மின்வாரியத்துக்கு அதிக அபராதம் விதிக்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

வன விலங்குகள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகள், நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தன. அப்போது, சமீபத்தில் ஓசூர், தருமபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி போன்ற பகுதியில், மீண்டும் மின்வேலியில் சிக்கி மூன்று யானைகள் இறந்த சம்பவத்தை சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மின்வேலியில் சிக்கி யானைகள் இறப்பதைத் தடுக்கும் வகையில் தேவையான பாதுகாப்பு உபகரணங்களைக் கொள்முதல் செய்யும் டெண்டர் இறுதி செய்யப்படவில்லை. இவ்வளவு நாள் காலதாமதம் ஏன்? என கேள்வி எழுப்பினர்.

அரசுத் தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன் கூறும் போது, யானைகள் மின்வேலியில் சிக்கி இறப்பதைத் தடுக்கும் பாதுகாப்பு கருவிகள் கொள்முதல் டெண்டர் இறுதி செய்யப்பட்டுவிட்டது. நிதி ஒதுக்கீட்டுக்கான ஒப்புதல் நடைமுறைகள் மட்டும் நிலுவையில் உள்ளன.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதால், விரைவில் பாதுகாப்பு கருவிகள் கொள்முதல் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இந்த கருவிகள் பொருத்தப்பட்டால், யானைகள் மின்வேலியில் கால் வைத்ததும், தானாகவே மின்சாரம் உடனே துண்டிக்கப்படும். முக்கிய வழித்தடங்களில் இந்த கருவிகள் பொருத்தப்படும் என்றார்.

இதையடுத்து, யானைகள் இறப்பு விஷயத்தில் அரசு உரிய தீவிரம் காட்டவில்லை எனில், நீதிமன்றம் கடும் உத்தரவுகளைப் பிறப்பிக்க நேரிடும் எனவும், மின்வேலிகளில் சிக்கி யானைகள் இறப்பு தொடரும் பட்சத்தில், மின்வாரியத்துக்கு அதிக அபராதம் விதிக்க நேரிடும் எனவும் எச்சரித்த நீதிபதிகள், விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

Readmore: மாணவர்களே!… இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு!… இறுதிவாய்ப்பு மிஸ் பண்ணிடாதீங்க!

English Summary

If elephants continue to die in electric fences, the electricity board may face heavy fines.

Kokila

Next Post

தமிழகமே...! கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் மீண்டும் திறப்பு...!

Sun Jun 9 , 2024
Schools in Tamil Nadu are set to open tomorrow after the summer vacation is over.

You May Like