fbpx

தொடர் விடுமுறை!… சொந்த ஊர் செல்பவர்களுக்காக 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பொது விடுமுறை, வார இறுதி நாட்கள் என தொடர் விடுமுறை நாட்களாக உள்ளதால் வெளியூர்களில் இருந்து சொந்த ஊர் செல்பவர்களின் வசதிக்காக 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது விடுமுறை, வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும், வெளிய ஊர்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்லுபவர்களுக்கு ஏதுவாகவும் தமிழகத்தில் சிறப்பு பேருந்துகள் இயக்கி வருகிறது போக்குவரத்துறை. சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

அந்தவகையில், வரும் 12ம் தேதி முதல் தொடர் முறை தினமாக வருகிறது. சனி, ஞாயிறு, மாத சிவராத்திரி மற்றும் சுதந்திர தினம் என தொடர் விடுமுறை நாட்களாக உள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட வெளி ஊர்களில் பணிபுரிபவர்கள், படிப்பவர்கள் என பலர் சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்து நிலையங்களில் குவிந்து இருப்பார்கள். இந்த நிலையில், வார இறுதிநாட்கள், சுதந்திர தினத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழ்நாடு போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது

வார இறுதி நாட்களான ஆக.12, 13 மற்றும் சுதந்திர தினமாக ஆக.15-ல் விடுமுறை என்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதன்படி, சென்னையில் இருந்து ஆக.11ம் தேதி கூடுதலாக 500 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது. கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் ஆகிய முக்கிய இடங்களுக்கு ஆக12ல் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மேலும், பெங்களுருவில் இருந்து பிற இடங்களுக்கு 400 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 1,100 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Kokila

Next Post

"உலகில் மிக சிறந்த வாட்டர் ஃபில்டர்" மண்பானை பயன்கள் பற்றி தெரியவில்லை என்றால் தெரிந்து கொள்ளுங்கள்..!

Wed Aug 9 , 2023
சில ஆண்டுகளுக்கு முன் நாம் அனைவரும் தண்ணீர் குடியிக்கிறோம் என்றால் செம்பில் அல்லது டம்ளர் தான் குடித்து வந்தோம்.ஆனால் இப்போது தண்ணீர் குடிக்க தனித்தனியாக பாட்டில் பயன்படுத்தி வருகின்றோம். நம் தாத்தா பாட்டிகள் அனைவரும் மண்பானை பயன்படுத்தி வந்தனர். அதில் பல நன்மைகளும் உள்ளன. இப்போது எந்த வீட்டிலும் மண்பானை பயன் பாட்டில் இல்லை. இப்போது மண்களால் ஆன பொருட்களை வாங்க மக்கள் அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றன. இதன் […]
கோடை காலத்தில் ஃபிரிட்ஜ் வாட்டரை குடிக்காதீங்க..!! மண் பானை நீரின் நன்மைகள் பற்றி தெரியுமா..?

You May Like