சென்னையில் 4-வது நாளாக ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் நிலையில், இதுவரை 107 ஆசிரியர்கள் மயக்கம் அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், இதற்கு முந்தையை மாதத்தில் பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும் அடிப்படை ஊதிய முரண்பாடு உள்ளது. இந்த முரண்பாட்டை நீக்கி, சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் க.அன்பழகன் கல்வி வளாகத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள், குடும்பத்துடன் கடந்த 27ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இதுவரை 107 ஆசிரியர்கள் தொடர்ந்து மயக்கம் அடைந்துள்ளனர். அவர்கள் அருகில் இருக்கக்கூடிய பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள். கல்வித்துறை அமைச்சருடன் இன்று பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்பு உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் எங்கள் கோரிக்கைக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறோம். கிடைக்காத பட்சத்தில் எங்களது போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.