fbpx

தொடரும் இயற்கை பேரழிவுகள்!. கனமழையால் ஒரே நாளில் 20 பேர் பலி!

Heavy Rain: கனமழை கொட்டித்தீர்க்கும் ராஜஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு பகுதிகளில் 20 பேர் பலியாகி உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பல்வேறு மாவட்டங்களிலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ஜெய்ப்பூர், பாரத்பூர், கரவுலி, தவுசா, சவாய் மாதோபூர், கோட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது

இதன் காரணமாக, பள்ளிகளுக்கு, மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் ஜெய்ப்பூரில் 11.8 செ.மீ., மழை பதிவானதாகவும், அடுத்த நான்கு நாட்களுக்கு தொடர்ந்து மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தநிலையில், கடந்த 24 மணி நேரத்தில் தொடர் கனமழைக்கு, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் 20 பேர் பலியாகி உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வயநாடு நிலச்சரிவு, இமாச்சல் மேக வெடிப்பு உள்ளிட்ட சம்பவங்களால் இயற்கை பேரழிவுகள் தொடர்ந்து வருவது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Readmore: தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பிடித்த சென்னை IIT…!

English Summary

Continuing natural disasters! 19 people died in one day due to heavy rain!

Kokila

Next Post

மகிழ்ச்சி...! மேயர், கவுன்சிலர்களுக்கு கௌரவ தொகை 20 % உயர்வு....! முதல்வர் அறிவிப்பு

Tue Aug 13 , 2024
20% increase in honorarium for mayor, councilors from next month

You May Like