fbpx

இன்று முதல் 4 நாட்களுக்கு தொடர் விடுமுறை..!! மாணவர்கள் செம குஷி..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு..!!

நடப்பாண்டின் ஆயுதபூஜை வரும் 23ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் திங்கட்கிழமையாக வருகிறது. அதேபோல, விஜயதசமி மறுநாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை நாட்களுடன் சனி, ஞாயிறு என மொத்தமாக 4 நாட்கள் அரசு விடுமுறை வருகின்றன.

அதனால், சென்னையில் தங்கி வேலைபார்ப்பவர்கள், மாணவர்கள் என பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், ரயில்களில் டிக்கெட் புக்கிங் முன்கூட்டியே ஆரம்பமாகிவிட்டது. அரசுப் பேருந்துகளிலும் கூட்டம் நெருக்கி தள்ளிவிடும். அதனால்தான், நேற்று முதல் 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்க அரசு முடிவு செய்திருக்கிறது. தொடர் விடுமுறையை முன்னிட்டு பள்ளிகளுக்கு இன்று முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு சமீபத்தில்தான் காலாண்டு தேர்வுக்கான விடுமுறை 5 முதல் 11 நாட்கள் வரை விடப்பட்டிருந்தது. அதனால், துர்கா பூஜைக்கான பண்டிகைக்கு, பெரும்பாலும் 3 முதல் 4 நாட்கள் தான் விடுமுறை அளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவியபடியே இருந்தது. இந்நிலையில், 4 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறை விடப்பட்டுள்ளது. பண்டிகைகள் முடிந்த நிலையில், மீண்டும் 25ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அதேநேரம், 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு மட்டும் சனிக்கிழமை சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Chella

Next Post

எல்.கே.ஜி. மாணவனை அடித்து மூக்கை உடைத்த ஆசிரியர்..!! மருத்துவமனையில் சிகிச்சை..!! கொந்தளித்த பெற்றோர்..!!

Sat Oct 21 , 2023
பேர்ணாம்பட்டு தனியார் பள்ளியில், எல்.கே.ஜி. மாணவனை மூக்கில் ரத்தம் வரும் அளவுக்கு ஆசிரியர் அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் வி.கோட்டா சாலையில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில், கோட்டைச்சேரி பகுதியைச் சேர்ந்த அருள் – தீபம் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதில் விக்ரம் அருள் என்ற மகன் இருக்கிறார். இவர், எல்கேஜி படித்து வருகிறான். இந்நிலையில், வழக்கம்போல் மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த […]

You May Like