fbpx

தொடர் விடுமுறை..! ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 2 மடங்கு உயர்வு..! பயணிகள் அதிர்ச்சி

தொடர் விடுமுறை காரணமாக ஆம்னி பேருந்துகளின் கட்டணம் ஆன்லைன் முன்பதிவில் இரண்டு மடங்கு அதிகரிப்பு செய்துள்ளதால், பேருந்துப் பயணிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை சுதந்திர தினத்தை முன்னிட்டு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை என்பதால், ஏராளமான பயணிகள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், ஆம்னி பேருந்துக் கட்டணம் ஆன்லைன் மூலமாக முன்பதிவு செய்வதில் கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. வழக்கமாக சென்னையில் இருந்து திருச்சிக்கு அதிகபட்சம் 800 ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது 2,300 ரூபாய் வரை கட்டணம் உயர்ந்துள்ளது.

தொடர் விடுமுறை..! ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 2 மடங்கு உயர்வு..! பயணிகள் அதிர்ச்சி

அதேபோல் கோவைக்கு வழக்கமாக 1000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்ட நிலையில், தற்போது 3000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும், மதுரை மற்றும் நெல்லைக்கு வழக்கமாக 1400 ரூபாய் வரை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது 3500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆன்லைன் இணையதளம் ஒன்றில் ஓசூரில் இருந்து கோவில்பட்டிக்கு 4000 ரூபாய் வரை டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக ஆன்லைன் முன்பதிவில் காட்டுகிறது. எனவே, இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

வரதட்சணை கொடுமை; இளம் பெண் அளித்த புகார்.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!

Fri Aug 12 , 2022
பெங்களூரு பசவனகுடியைச் சேர்ந்த சந்தீப் என்பவருக்கு கடந்த வருடம், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். இந்த திருமணம் ஆடம்பரமாக நடந்துள்ளது. பெண்ணின் தந்தை ஆறு கோடி ரூபாய் திருமணத்திற்கு செலவு செய்ததாக கூறுகின்றனர். மேலும் மாப்பிள்ளை சந்தீப்புக்கு திருமணத்தின்போது 200 கிலோ வெள்ளி, நாலு கிலோ தங்கம், 55 லட்சம் மதிப்புள்ள காரையும் வரதட்சணையாக கொடுத்துள்ளனர். இவ்வளவு செய்தும் திருமணத்திற்கு பிறகு மேலும் வரதட்சணை […]
7 ஆண்டுகளில் 14 முறை கட்டாய கருக்கலைப்பு..! உறவில் இருந்தவர் உதறித்தள்ளியதால் விபரீத முடிவு..!

You May Like