பிரபல யூடியூப் சேனல் சமையல் கலைஞர் ‘டாடி ஆறுமுகம்’ வில்லேஜ் ஃபுட் ஃபேக்டரி என்ற சேனலை நடத்தி வருகிறார். 47 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். முதல் மாதம் ரூ.7 ஆயிரம் ரூபாயில் தான் இவர்களின் வருமானம். அடுத்த மாதம் நாற்பதாயிரம். தற்போது பல லட்சங்களை வருமானாக பெறுகிறார் ‘டாடி’ ஆறுமுகம். சாதாரண பெயிண்டிங் காண்ட்ராக்டராக இருந்த ஆறுமுகம் இன்று யூடியூப் மூலம் டாடி ஆறுமுகமாக மாறி தமிழ்நாட்டையே கலக்கி வருகிறார்.
இன்று உணவு பிரியர்கள் மத்தியில் டாடி ஆறுமுகத்தைத் தெரியாத ஆட்களே கிடையாது. தற்போது யூடியூப் வீடியோ சம்பாத்தியத்தின் மூலம் தற்போது சொந்தமாக வீடுகட்டிவிட்டார். இந்நிலையில், Village Food Factory சேனலின் முகநூல் பக்கத்தில் தொடர்ந்து ஆபாச படங்கள் பகிரப்பட்டு வந்ததால், பயனர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சூழலில் Village Food Factory குழுவினர் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளனர். அந்த பதிவில் “யாரோ தெரியாத நபர்களால் கணக்கில் ஆபாச புகைப்படங்கள் பதிவிடப்படுகின்றன.எத்தனை முறை அழித்தாலும் மீண்டும் மீண்டும் ஸ்டோரி ஆக பதிவிடப்படுகின்றது. facebook நிறுவனத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பொறுமை காக்கவும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளனர்.
Read More : Annamalai | ‘இந்த வேட்பாளர்களுக்கே முன்னுரிமை’..!! டெல்லி செல்லும் முன் ட்விஸ்ட் வைத்து சென்ற அண்ணாமலை..!!