fbpx

கிண்டி மருத்துவமனையில் மீண்டும் சர்ச்சை..!! மருத்துவர்கள் இல்லாததால் இளைஞர் உயிரிழப்பு..!! உறவினர்கள் போராட்டம்..!!

சென்னை கிண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த இளைஞர் உயிரிழந்து விட்டதாகவும், மருத்துவர்கள் இல்லாததால் இளைஞர் உயிரிழந்து விட்டதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டி வாக்குவாதம் செய்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் வயிற்று வலியால் இளைஞர் ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், சிகிச்சைக்கு முன்பே அவர் உயிரிழந்து விட்டதாக கூறப்படுகிறது.

மருத்துவர்கள் பணியில் இல்லாததால் உயிரிழந்து விட்டதாக இளைஞரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மருத்துவர்கள் போராட்டத்திற்கு சென்றதால் சிகிச்சை அளிக்க வரவில்லை என்றும் அதனால் தகுந்த சிகிச்சை கிடைக்காததால் விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்து விட்டதாகவும் கூறுகின்றனர்.

எமர்ஜென்சி வார்டில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை அளிக்க எந்த மருத்துவரும் வரவில்லை என்றும் புகாரளிக்க கூறப்பட்டு வருகிறது. முன்னதாக சென்னை கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையின் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Read More : ரூ.400 கோடி ஊழல்..!! அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மீண்டும் செக் வைத்த அதிமுக..!! லஞ்ச ஒழிப்புத்துறையில் பரபரப்பு புகார்..!!

English Summary

The youth who was admitted to the Chennai Guindi Hospital for treatment has died and his relatives have accused him of the lack of doctors and argued that the young man died.

Chella

Next Post

கூகுளில் டிசம்பர் 8ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய விதிமுறை..!! மொத்தமும் டெலிட் ஆகப்போகுது..!! உடனே பேக்கப் எடுங்க..!!

Fri Nov 15 , 2024
The new rules will come into effect on Google Accounts from December 8.

You May Like