விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் ஒளிபரப்பானாலும் சில நிகழ்ச்சிகள் மக்கள் மனதில் பேராதரவு பெற்று விடுகின்றன. அந்தவகையில், ரசிகர்களின் ஏகபோக வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாக ‘குக் வித் கோமாளி’ உள்ளது. இந்த நிகழ்ச்சியை கூடுதல் சிறப்பாக்குவது குக்குகளை விட கோமாளிகள் தான். குறிப்பாக, கோமாளிகளான புகழ், பாலா, குரேஷி, சரத், ஜிபி முத்து, சுனிதா, மணிமேகலை என்று பலர் தங்களுடைய தனி ஸ்டைலில் செஃப் முதல் குக்குகள் வரை சரமாரியாக கலாய்த்து தள்ளுவார்கள்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சி மூலம் கிடைத்த பிரபலம் காரணமாக விஜய் டிவியில் தற்போது தொகுப்பாளினியாகவும் அவதாரம் எடுத்துள்ள, மணிமேகலை திடீர் என விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொகுப்பாளினி மணிமேகலை காலில் கட்டுடன் உள்ள புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில் காலில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இந்நிலையில், காயமடைந்துள்ள மணிமேகலைக்கு அவரது ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.