தமிழ்நாட்டில் கூட்டுறவு துறையின் கீழ் உள்ள பண்டக சாலை நகர கூட்டுறவு வங்கி, கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் வேளாண் விற்பனையாளர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இதில் காலியாக உள்ள உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்கள் குறித்து அறிவிப்பு கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மாவட்ட வாரியாக காலிப்பணியிடங்களை நிரப்ப எழுத்துத் தேர்வு டிசம்பர் 24ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஸ்ரீ கிருஷ்ணசுவாமி மகளிர் கல்லூரி உள்ளிட்ட 6 மையங்களில் நடைபெறவுள்ள இந்த தேர்வுக்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் இணையதளம் மூலம் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.