fbpx

மீண்டும் சேவையை தொடங்கியது கோரமண்டல் எக்ஸ்பிரஸ்…..! வெளியான முக்கிய தகவல்….!

ஓடிஸா மாநிலம் பாலாசூர் பகுதியில் கடந்த 2ஆம் தேதி இரவு 3 ரயில்கள் ஒன்று மோதி விபத்துக்கு சிக்கியது இந்த சம்பவத்தில் 275 பேர் இதுவரையும் பலியாகி இருக்கிறார்கள் மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து, சென்ற மூன்று நாட்களாக மீட்பு பணி நடைபெற்று வந்த நிலையில் பலாசூரில் ரயில் விபத்து நடந்த பகுதியில் நேற்று இரவு சுமார் 10.40 மணியளவில் மறுபடியும் ரயில் போக்குவரத்து ஆரம்பமானது.. அந்த விதத்தில் முதல் ரயிலாக ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து ஒடிசாவில் இருக்கின்ற ரூர்கோலா இரும்பு ஆலையை நோக்கி நிலக்கரியை ஏற்றுக்கொண்டு சரக்கு ரயில் சென்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, விபத்து நடந்த பகுதிகளில் பயணிகள் ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டு வருகின்றது. தற்சமயம் சென்னையிலிருந்து ஷாலிமாருக்கு காலை 7 மணிக்கு வழக்கமாக புறப்படும் கோரமண்டல் விரைவு ரயில் இன்று 3.45 மணி நேரம் தாமதமாக காலை 10:45 மணிக்கு புறப்பட்டு சென்ற பொழுது அதேபோல ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் செல்வதற்கு சென்னை சென்ட்ரலில் இருந்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வருக்கும் இன்று இரவு 7:20 மணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது இந்த சிறப்பு ரயிலில் செல்ல விரும்புபவர்கள் சென்ட்ரலில் இருக்கின்ற உதவி மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

+2 முடித்த மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!- நாளை வெளியாகிறது...

Mon Jun 5 , 2023
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான ரேண்டம் எண் நாளை வெளியிடப்படவுள்ளது. தரவரிசை பட்டியலில் இரண்டு மாணவர்கள் ஒரே தரவரிசையில் வந்தால் மாணவர் சேர்க்கைக்கு ரேண்டம் எண் எனப்படும் சமவாய்ப்பு எண் பயன்படுத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பி.இ, பி.டெக். படிப்புகளில் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 5ம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பித்து வந்தனர். பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நேற்றோடு முடிந்தது. […]
பி.இ., பிடெக் மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு..!! ரூ.50,000 சம்பளத்தில் வேலை..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

You May Like