fbpx

கோரமண்டல் விரைவு ரயில் சென்ற லூப் லைன்..! அதனால்தான் விபத்தா?

ஒடிசாவின் பாலசோர் பகுதியில் 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்டு நேர்ந்த கோர விபத்தில், 250-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் நடந்த இந்த நூற்றாண்டின் மிக மோசமான ரயில் விபத்தாக கருதப்படும் இந்த நிகழ்வு குறித்து, 4 பேர் கொண்ட ரயில்வே அதிகாரிகள் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது.

வழக்கமாக ரயில்கள் பயணம் மேற்கொள்ள பயன்படுத்தப்படும் முதன்மையான பாதைகள் மெயின் லைன் என அழைக்கப்படுகிறது. அதே நேரம், அதிகப்படியான ரயில்களை இயக்குவதற்கு ஏதுவாக ரயில் நிலையங்களில் அமைக்கப்படும் கூடுதல் பாதை தான் லூப் லைன் என குறிப்பிடப்படுகிறது. அதன்படி, மெயின் லைனில் இருந்து தண்டவாளப் பாத விலகி தனி வழியில் பயணித்துசிறிது தூரத்திற்குப் பின் மீண்டும் மெயின் லைனில் இணைந்துவிடும். இதற்கு பெயர் தான் லூப் லைன் எனப்படும். இதன் மூலம் பயணிகள் ரயில், ரயில் நிலையத்தில் நிற்பதற்கான இடவசதி ஏற்படுத்த முடிகிறது. 750 மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்படும் இந்த லூப் லைன்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட இன்ஜின்களுடன் கூடிய ஒரு சரக்கு வாகனத்தை கூட நிறுத்த முடியும். அதேநேரம், தற்போது இந்தியாவில் 1500 மீட்டர் நீளத்திலான லூப் லைன் தான் கட்டமைக்கப்படுகிறது. இது வழக்கமான லூப் லைனை காட்டிலும் இரண்டு மடங்கு நீளமானதாகும்.

இத்தகைய லூப் லைனில் நின்று கொண்டிருந்த ஒரு சரக்கு ரயிலின் மீது தான், அதிவேகமாக வந்த கோரமண்டல் பயணிகள் விரைவு ரயில் தவறான சிக்னல் காரணமாக மோதி விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, அங்கு மீட்பு பணிகள் முடிவுற்ற நிலையில், உருக்குலைந்து கிடக்கும் ரயில் பெட்டிகளை அகற்றி ரயில் போக்குவரத்தை சீரமைக்கும் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. விபத்து காரணமாக குறிப்பிட்ட வழித்தடத்தில் 51 ரயில் சேவைகள் துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Maha

Next Post

தேர்வே இல்லாமல் அரசு வேலை- அஞ்சல்துறையில் 12,828 காலியிடங்கள்!!

Sat Jun 3 , 2023
10ம் வகுப்பில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வே இல்லாமல் அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அஞ்சல் நிலையங்களில் காலியாக உள்ள போஸ்ட் மாஸ்டர் மற்றும் துணை போஸ்ட் மாஸ்டர் பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது. மொத்தம் 12,828 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வயது வரம்பு: 18-40 பட்டியல் சாதிகள் (5 ஆண்டுகள்), பட்டியல் பழங்குடியினர் (5 ஆண்டுகள்) , இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (3 […]

You May Like