கொரோனா பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்திருந்தாலும், அதன் பாதிப்பு இன்னும் முழுமையாக நீங்கிவிடவில்லை.. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு (WHO) கொரோனா தொற்று எதிர்வரும் மாதங்களில் தீவிரமடையும் என்று கூறியுள்ளது.. இதனால் கொரோனா இறப்பு எண்ணிக்கை மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளது..
செய்தியாளர்களிடம் பேசிய WHO தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், “ உலகளவில் தற்போது கொரோனா இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.. வடக்கு அரைக்கோளத்தில் குளிர்ந்த காலநிலை நெருங்கி வருவதால், வரும் மாதங்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் மற்றும் இறப்புகள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்..
கொரோனா வைரஸின் ஸ்பைக் புரதத்தில் உள்ள மாறுபாடுகள் கவலையளிக்கின்றன, ஏனெனில் இது உலகளவில் ஒரு புதிய அலையைத் தூண்டக்கூடும்.. ஒமிக்ரான் துணை மாறுபாடு முந்தைய மாறுபாடுகளை விட வேகமாக பரவக்கூடியதாக உள்ளது.. வைரஸ் எதிர்பார்த்ததை விட வேகமாக மாறுகிறது.. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதில் மக்கள் அலட்சியமாக இருக்க கூடாது.. கொரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை.. உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான ஒரே வழி பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுவதுதான்..” என்று தெரிவித்தார்..
கொரோனாவில் தற்காத்து கொள்ள WHO பரிந்துரைத்த சில பாதுகாப்பு நடவடிக்கைகள் :
- பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.
- நெரிசலான இடங்களைத் தவிர்க்கவும்.
- ஒரே இடத்தில் பலர் கூடுவதை தவிர்க்கவும்.
- முகக்கவசத்தை கட்டாயம் அணிய வேண்டும்.
- உங்கள் முகம், மூக்கு மற்றும் கண்களைத் தொடுவதற்கு முன் உங்கள் கைகளை சரியாகக் கழுவுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- அறை நன்கு காற்றோட்டமாக இருக்க, காலையில் ஜன்னல்களைத் திறந்து வைக்கவும்.
2019 இறுதியில் கொரோனா வைரள் முதலில் பரவத்தொடங்கியது.. தொற்றுநோய் பரவி கிட்டத்தட்ட 2.5 ஆண்டுகள் ஆகின்றன, இதுவரை உலகம் மொத்தம் 600 மில்லியன் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..