fbpx

மீண்டும் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா..!! முகக்கவசம் கட்டாயம்..!! மத்திய அரசு பரபரப்பு உத்தரவு..!!

கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. இதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த ஆண்டு ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மத்திய அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

மீண்டும் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா..!! முகக்கவசம் கட்டாயம்..!! மத்திய அரசு பரபரப்பு உத்தரவு..!!

பழையபடி கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளில் தீவிரம் காட்டுமாறும் கொரோனா உறுதியானவர்களின் மரபணுவை சோதனைக்கு உட்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், கூட்ட நெரிசல் மிகுந்த இடங்களில் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என மத்திய அமைச்சர் மன்சூக் மாண்டவியா அறிவுறுத்தியுள்ளார். கொரோனா அதிகரித்து வருவது குறித்து ஆலோசனை நடத்திய நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும், கொரோனா பரவலை தடுக்க ரயில் மற்றும் விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Chella

Next Post

மிக பிரம்மாண்டமாக உருவாகும் நேரு ஸ்டேடியம்!!! வாரிசு இசை வெளியீட்டு விழா.. யாரெல்லாம் கலந்துக்கப்போறாங்க தெரியுமா..?

Wed Dec 21 , 2022
தளபதி விஜய் நடிப்பில், பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ளது “வாரிசு” படம். முதலில் இந்த படத்திற்கு ஆந்திராவில் திரையங்குகள் கிடைப்பதில்லை என்ற சிக்கல் தோன்றி மறைந்தது, பிறகு தமிழகத்தில் அதே பிரச்சனை பூதாகரமாக வெடித்து தற்போது அதுவும் சரியாகி, 2023 ஆம் ஆண்டு பொங்கலன்று திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்க, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, குஷ்பு, […]

You May Like