தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பொதுமக்கள் யாரும் பதற்றப்பட வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு 2 ஆக இருந்த கொரோனா தொற்று பாதிப்பு, தற்போது 100- ஐ எட்டியுள்ளது. இதனால் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் பதற்றப்பட வேண்டாம் எனினும் பாதுகாப்போடு இருப்பது அவசியம் என்று தெரிவித்தார்.
வாரத்திற்கு 35 ஆயிரம் பேர் வரையில் ஆர்.டி.பி.சி.ஆர் சோதனை செய்து வருகிறோம். மேலும், தேவையான படுக்கை வசதிகள் இருப்பதை உறுதி செய்யவும், தேவையான மருந்துகள் கையிருப்பில் இருப்பதை சரிபார்க்கவும் அனைத்து மாவட்டங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனாவுக்கான தற்காப்பு வசதிகளை முறையாக பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.