தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு பல மாவட்டங்களிலும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா தடுப்பு வழிமுறைகளை மக்கள் அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் வேகம் எடுத்துள்ள கொரோனா வைரஸ் தொற்று நேற்று புதிய உச்சமாக 49 பேருக்கு உறுதியாகி உள்ளது.
சென்னை மற்றும் கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கொரோனா கண்டறியப்பட்டதால் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் பொதுமக்கள் பொதுவெளியில் கட்டாயம் முக கவசம் மற்றும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழகத்தில் கொரோனா உயர்ந்தால் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்துவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.