மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அங்கு கூடுதல் எச்சரிக்கை தேவை என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. ஒரு நாள் கொரோனா பாதிப்பு 1000, 2000 என உயர்ந்து வந்த நிலையில் நேற்று 6,000-ஐ கடந்தது. ஒமிக்ரான் மாறுபாட்டின், XBB.1.16 வகை கொரோனா காரணமாக தற்போது பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று கூறப்படுகிறது.. இதை தொடர்ந்து கொரோனா பரிசோதனையை அதிகரிக்கவும், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகள் தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு மாநிலங்களை வலியுறுத்தி வருகிறது…
இதை தொடர்ந்து மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அனைத்து மாநில சுகாதார அமைச்சர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.. வீடியோ கான்பிரன்ஸ் முறையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். கொரோனா பரவலை கட்டுப்படுவத்து குறித்தும், நோய் தொற்றை தடுக்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது..
அப்போது கொரோனா அதிகரிப்பு குறித்து விழிப்புடன் இருக்க மாநில அரசுகளுக்கு, மத்திய அமைச்சர் மான்சுக் மாண்ட்வியா அறிவுறுத்தினார்.. சுகாதார தயார் நிலை தொடரும் ஏப்ரல் 8,9 தேதிகளில் மாவட்ட நிர்வாகங்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.. ஏப்ரல் 10, 11 ஆகிய தேதிகளில் அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பு ஒத்திகை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்…
மேலும் இந்தியாவில் 7 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும், அவை எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவித்தார்.. அதன்படி, கேரளா, மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, ஹிமாச்சல பிரதேசம், தமிழ்நாடு, ஹரியானா
ஆகிய மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. இந்த மாநிலங்களில் தேவையான மருந்துகள் போதுமான அளவு இருப்பு இருப்பதை உறுதி செய்வதோடு, போதுமான மருத்துவமனை படுக்கைகள் உட்பட மருத்துவ வசதிகள் தயார்நிலையை உறுதி செய்ய வேண்டும் என்று மாநில சுகாதார அமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஒமிக்ரானின் துணை வகையான, XBB.1.16 மாறுபாட்டின் பாதிப்பு பிப்ரவரியில் 21.6 சதவீதத்தில் இருந்து மார்ச் 2023 இல் 35.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இருப்பினும், இந்த மாறுபாட்டால், மருத்துவமனையில் சேர்க்கப்படுவது அல்லது இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது..