fbpx

3 ஆண்டுகளில் நடந்த ஒப்பந்த முறைகேடுகள்…! தமிழக அரசுக்கு அறப்போர் கொடுத்த புகார்…!

கடந்த 3 ஆண்டுகளில் நடந்த ஒப்பந்த முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை, தலைமைச் செயலர் மற்றும் நெடுஞ்சாலைத்துறை செயலரிடம் அறப்போர் இயக்கம் புகார் அளித்துள்ளது.

இது குறித்து அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; டெண்டர் திறப்பதற்கு முன்பே யாருக்கு டெண்டர்கள் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று 4 டெண்டர்களில் அறப்போர் இயக்கம், அப்போதைய நெடுஞ்சாலைத்துறை செயலருக்கு அனுப்பியும், அதை மீறி டெண்டர்கள் அவர்களுக்கு வழங்கிய ஆதாரம், நல்ல நிலையில் உள்ள சாலைகளை மீண்டும் போடுவதற்கு இந்த டெண்டர்களில் சேர்த்ததன் ஆதாரம், எஸ்டிமேட் அதிகப்படுத்தப்பட்டு இதனால் ரூ.692 கோடி இழப்பு ஏற்படுத்தியதன் ஆதாரம் என அனைத்தும் புகாருடன் இணைக்கப்பட்டுள்ளது.

இதில் ஈடுபட்ட அனைத்து அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். முக்கியமாக இந்த நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களில் வெற்றி பெற்ற KCP Engineers Pvt Ltd, SPK & Co மற்றும் அவர்களைச் சார்ந்த நிறுவனங்களை தற்போது வருமான வரித்துறை சோதனை செய்து 500 கோடிக்கு போலி செலவினங்கள் காண்பிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. இவையும் விசாரிக்கப்பட வேண்டும். நெடுஞ்சாலைத் துறையின் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பங்கும் உள்ளதா என்பதை விசாரிக்க கோரி உள்ளோம். தஞ்சாவூர், கோயம்புத்தூர் மற்றும் சிவகங்கை ஆகிய இடங்களில் தமிழ்நாடு வெளிப்படைத்தன்மை சட்டத்தின் 1998 மற்றும் தமிழ்நாடு வெளிப்படைத்தன்மையில் உள்ள டெண்டர் விதிகள் 2000 இன் பல்வேறு பிரிவுகளை மீறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

சென்னை மக்கள் கவனத்திற்கு.. இன்று இந்த சாலைகளில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை..

Thu Jul 28 , 2022
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.. பிரதமர் மோடி இந்த விழாவை தொடங்கி வைக்கிறார்.. பிரதமரின் சென்னை வருகையை ஒட்டி சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.. சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் “ 44-வது செஸ் ஒலிம்பியாட் விழா சென்னை பெரியமேடு ராஜா முத்தையா சாலையில் உள்ள ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டரங்கத்தில் இன்று நடைபெறுகிறது.. இதில் பிரதமர் மோடி, […]

You May Like