மின்சாரம், டாஸ்மாக், போக்குவரத்து என பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெறுவதாக அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை கிண்டியில் மத்திய அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழ்நாடு மக்கள் பிரச்சனைகளை தேர்தலில் நேரடியாக முன்னிறுத்துவோம். எங்கள் கூட்டணி மிக உறுதியான கூட்டணியாக அமைந்துள்ளது. எந்த குழப்பமும் இதில் இருக்காது. மின்சாரம், டாஸ்மாக், போக்குவரத்து என பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெறுகிறது. இதற்கு முதலமைச்சர் முக.ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் பதில் சொல்லியே ஆக வேண்டும். திமுகவைப் போல, மடை மாற்றம் செய்ய மாட்டோம்.
தமிழ் மக்கள், மாநிலத்தை, தமிழ் மொழியை நாங்கள் கௌரவமாக கருதுகிறோம். நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவினோம். காசி தமிழ்ச் சங்கம் நடத்தினோம். தமிழ் மொழியை வளர்க்க திருக்குறளை 63 மொழிகளில் மொழி பெயர்த்துள்ளோம். பாரதியாரின் ஒட்டுமொத்த படைப்புகளையும் நூல்களாக வெளியிட்டவர் பிரதமர் மோடி. பொதுத்தேர்வுகளை எல்லாம் இப்போது தமிழ் மொழியில் எழுதுகிறார்கள். பாஜக ஆளும் மாநிலத்தில் மருத்துவம், பொறியியல் பாடநூல்களை பிராந்திய மொழியில் படிக்கின்றனர். தமிழ் வளர்ச்சிக்காக திமுக என்ன செய்கிறது என்பதை மக்களிடம் பட்டியலிட முடியுமா..?” என்றார்.
Read More : BIG BREAKING | மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி..!! மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு..!!