கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து தற்போது வரை 36 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட போலீஸ் எஸ்.பிக்களுக்கு அதிரடி உத்தரவு பறந்துள்ளது.
கள்ளச்சாராயம் விற்பவர்கள், காய்ச்சுபவர்கள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கும் நிலையில், ஒவ்வொரு மாவட்டத்திலும் சட்டவிரோதமாக சாராயம் விற்கப்படுகிறதா என்பது குறித்து சோதனை நடத்த அனைத்து மாவட்ட எஸ்.பிக்கள் / மாநகர கமிஷனர்கள் என அனைத்து போலீசாருக்கும் ஆர்டர் பறந்துள்ளது.
அதே நேரத்தில் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலும் இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்தி, சட்டவிரோதமாக சாராயம் விற்பவர்கள், மது விற்பவர்கள் என ஒருவர் கூட விடாமல் பிடித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இந்த விவகாரம் குறித்து விசாரிக்க வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளது தமிழ்நாடு அரசு. இந்நிலையில், அங்கு சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி தலைமையிலான போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.
யார் தவறு செய்திருந்தாலும், அவர் எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும், எவ்வளவு பலம் வாய்ந்தவராக இருந்தாலும் திமுக அரசு விடாது என அமைச்சர் ஏ.வே.வேலு கூறியிருந்த நிலையில், சிபிசிஐடி விசாரனையில் பல முக்கிய பிரமுகர்கள் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Read More : கள்ளச்சாராயம், மாஞ்சோலை விவகாரம்..!! சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்..!!