fbpx

கள்ளச்சாராய மரணங்கள்..!! பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விஜய் கட்சி செய்யப்போகும் உதவி..!! என்ன தெரியுமா..?

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 55 பேர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை செய்து தர கட்சி நிர்வாகிகள் உத்தரவிட்டார்.

இத்தகைய சூழலில் தான், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்க விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தினர் முடிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழக வெற்றிக் கழக தலைமை சார்பில் அதன் எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது,

”தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சொல்லுக்கிணங்க, தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் ஆனந்த் வழிக்காட்டுதலின்படி, கள்ளக்குறிச்சி நகரத்தில் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை மாவட்ட தலைமை தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வழங்கப்பட உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : செம குட் நியூஸ்..!! பெண்கள், திருநங்கைகள் ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம்..!! சட்டப்பேரவையில் அறிவிப்பு..!!

English Summary

While 55 people have died due to drinking liquor in Kallakurichi, more than 100 people are undergoing intensive treatment.

Chella

Next Post

3 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் மழை..!! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்..!!

Sat Jun 22 , 2024
According to the Meteorological Department, there is a possibility of rain in Tirunelveli, Tenkasi, Kanyakumari and Coimbatore districts.

You May Like