fbpx

உலகில் மோசமான ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகள்.. 4-வது இடத்தில் இந்தியா.. முதலிடத்தில் எந்த நாடு..?

உலகிலேயே மோசமான ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா 4-வது இடத்தை பிடித்துள்ளது..

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே வேகமாக வாகனம் ஓட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் நாட்டில் சாலை விபத்துகளும் அதிகரித்து வரும் நிலையில், மோசமான ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியாவும் இடம்பெற்றுள்ளது.. ஒரு காப்பீட்டு நிறுவனம் வெளியிட்ட தரவரிசை பட்டியலின்படி, மோசமான ஓட்டுனர்களைக் கொண்ட நாடுகளில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. அந்நிறுவனம் 50 நாடுகளைச் சேர்ந்த ஓட்டுநர்களிடம் ஆய்வு நடத்தியது. வேக வரம்பு, சாலைகளின் நிலை மற்றும் ஆல்கஹால் அளவு உள்ளிட்ட பிற அம்சங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டது. ஆய்வுக்குப் பிறகு, சிறந்த மற்றும் மோசமான ஓட்டுனர்களின் பட்டியல் தொகுக்கப்பட்டது.

உலகின் மோசமான ஓட்டுநர்கள் பட்டியலில் தாய்லாந்து முதலிடத்தில் உள்ளது.. 2-வது இடத்தில் பெரு உள்ளது. உலகின் மோசமான ஓட்டுநர்களைக் கொண்ட நாடுகளில், லெபனான் 3-வது இடத்திலும், இந்தியா 4-வது இடத்திலும் உள்ளது.. அதே நேரத்தில் , உலகின் சிறந்த ஓட்டுநர்களைக் கொண்டுள்ள நாடுகளில் ஜப்பான் முதலிடத்தை பிடித்துள்ளது.. இந்த பட்டியலில், நெதர்லாந்து 2வது இடத்திலும், நார்வே 3-வது இடத்திலும் உள்ளது. எஸ்டோனியா நான்காவது இடத்தில் உள்ளது. சிறந்த ஓட்டுநர்களைக் கொண்ட முதல் ஐந்து நாடுகளின் பட்டியலில் ஸ்வீடன் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது..

இதனிடையே சமீபத்தில், புவிஇருப்பிட தொழில்நுட்ப நிபுணரான டாம்டாம் நடத்திய ஆய்வில், வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் மெதுவான நகரங்களில் ஒன்றாக பெங்களூரு இடம்பெற்றிருந்தது.. பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் நேரத்தில் வெறும் 10 கிலோமீட்டர்களை கடக்க சராசரியாக அரை மணி நேரம் ஆகும் என்று மதிப்பிடப்பட்டது.. உலகெங்கிலும் உள்ள 416 நகரங்களை ஒப்பிட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இது உலகின் இரண்டாவது மெதுவான நகரமாக பெங்களூரை தரவரிசைப்படுத்தியது. இதற்கிடையில், இந்த பட்டியலில் லண்டன் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Maha

Next Post

ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் கூண்டோடு விலகல்..!! பெரும் பின்னடைவு..!! கடைசியில் இன்ப அதிர்ச்சி..!!

Wed Feb 22 , 2023
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி, அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் முருகானந்தம் உள்ளிட்ட 106 பேர் தங்கள் ராஜினாமா கடிதத்தை ஓபிஎஸ்-க்கு அனுப்பி உள்ளனர். இது ஓபிஎஸ்- க்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், […]

You May Like