கடலூர் மாவட்டம் திட்டக்குடியில், 13 மற்றும் 14 வயது பள்ளி மாணவிகள் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், திடீரென சிறுமிகள் இருவரும் மாயமாகியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமிகளை அக்கம்பக்கத்தில் தேடி உள்ளனர். ஆனால் எங்கு தேடியும் சிறுமிகள் கிடைக்காததால் சந்தேகம் அடைந்த பெற்றோர், உடனடியாக சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த திட்டக்குடி போலீசார், தீவிர விசாரணை நடத்தி வந்தனர். ஆனால், ஒரு வாரத்தில் 2 சிறுமிகளும் தங்களின் வீடுகளுக்கு திரும்பி சென்றுள்ளனர். ஆனால், சிறுமிகளின் உடல் நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சிறுமிகளிடம் என்ன நடந்தது என்று விசாரித்துள்ளனர். அப்போது சிறுமிகள் கூறிய காரியம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆம், அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தை சேர்ந்த 39 வயதான சதீஷ்குமார் மற்றும் அவரது மனைவியான 39 வயது தமிழரசி, ஆகிய இருவரும் தங்களை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக கூறி அழுதுள்ளனர். மேலும், திட்டக்குடி, விருத்தாசலம், வடலூர், கோலியனூர், நெய்வேலி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புரோக்கர்கள் மூலம் சிறுமிகள் பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தியது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்திய சதீஷ்குமார், தமிழரசி உள்பட 22 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கு கடந்த 2016ம் ஆண்டு சிபிசிஐடி போலீசாருக்கும் மாற்றப்பட்டது. சிபிசிஐடி போலீசார், கடலூர் மகிளா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். ஆனால், சதீஷ்குமார் மற்றும் தமிழரசி, கடந்த 2018ல் தலைமறைவாகினர்.
இதனிடையே, கடந்த 4.1.2019ம் ஆண்டு, 16 பேருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டது. மேலும், வழக்கில் தொடர்புடைய 2 பேர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். மேலும் ஒருவர் கடந்த 2014ம் ஆண்டு சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யபட்டார். இந்நிலையில், கடந்த 7 வருடங்கள் தலைமறைவாக இருந்த சதீஷ்குமார், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாக சிபிசிஐடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, சிபிசிஐடி போலீசார் கருமத்தம்பட்டிக்கு சென்று சதீஷ்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், தமிழரசி திருவண்ணாமலையில் வீட்டு வேலை செய்வது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, போலீசார் திருவண்ணாமலைக்கு சென்று தமிழரசியை கைது செய்தனர். இந்நிலையில், பாலியல் தொழிலில் தான் அதிகம் சம்பாதிக்க முடியும் என்று நினைத்த சதீஷ்குமார் மற்றும் தமிழரசி இருவரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Read more: எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக..!! ஒருவழியாக ஓகே சொன்ன சசிகலா..!! 2026இல் நம்ம ஆட்சி தான்..!!