fbpx

’நீதிமன்றம் அரசின் அனைத்து நிர்வாக செயல்பாடுகளிலும் தலையிட முடியாது’..! – நீதிபதிகள் கருத்து..!

நீதிமன்றம் அரசின் அனைத்து நிர்வாகச் செயல்பாடுகளிலும் தலையிட முடியாது என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

கல்குவாரிக்கு அனுமதி வழங்குவது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது, சாலை அமைப்பது போன்ற
பல்வேறு பொதுநல வழக்குகள் இன்று உயர்நீதிமன்ற கிளை நீதிபதி பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ”நீதிமன்றம் என்பது நீதி பரிபாலனை நடக்கக்கூடிய இடம். இங்கு சாலை அமைப்பது, கழிவறை கட்ட உத்தரவிடுவது போன்றவை நீதிமன்றத்தின் பணிகள் இல்லை. மேலும், நீதிமன்றம் அரசின் அனைத்து நிர்வாகச் செயல்பாடுகளிலும் தலையிட முடியாது.

’நீதிமன்றம் அரசின் அனைத்து நிர்வாக செயல்பாடுகளிலும் தலையிட முடியாது’..! - நீதிபதிகள் கருத்து..!

சாலை, பாலம் அமைப்பது, கழிப்பறை கட்டுவது போன்றவைகளுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகளை
அணுகலாம் என்றும் பொதுநல வழக்கு என்ற பெயரில் நீதிமன்றத்தின் நேரத்தையும், மாண்புகளை கெடுக்க வேண்டாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

Chella

Next Post

கோவையில், காவலர் குடியிருப்பில் போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை..!

Thu Aug 11 , 2022
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பருத்தியூரில் வசித்து வருபவர் திருமூர்த்தி. இவரது மகன் மணியரசு(36). இவர் கடந்த 2013-ஆம் வருடம் காவல் துறையில் வேலையில் சேர்ந்தார். கடந்த இரண்டு வருடங்களாக கோமங்கலம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் ஒரு பெண்ணுக்கும், மணியரசுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. மேலும் வருகிற 1-ஆம் தேதி நடக்கவிருக்கும் திருமணத்திற்கு பத்திரிக்கை அச்சடித்து உறவினர்கள் மற்றும் […]

You May Like