fbpx

’எச்.ராஜா மீது நீதிமன்றமே வழக்கு தொடர முடியும்’..!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி..!! அனைத்து வழக்குகளும் தள்ளுபடி..!!

தந்தை பெரியார் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் எச்.ராஜா மீதான 11 வழக்குகளை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பாஜக தேசிய செயலாளராக இருந்த எச்.ராஜா, கடந்த 2018இல் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற இந்து முன்னணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது, அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்களையும், அவர்களின் குடும்ப பெண்களையும் தரக்குறைவாக விமர்சித்து பேசியதாக வேடசந்தூர், நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டன.

இதேபோல், பெரியார் சிலையை உடைப்பேன் என்று சமூக வலைதளங்களில் பதிவு செய்தது தொடர்பாகவும், திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக கருத்து கூறியதாகவும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், பல்வேறு காவல் நிலையங்களில் பதிவான 11 வழக்குகளை ரத்து செய்யக் கோரி எச்.ராஜா சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.

இதையடுத்து எச்.ராஜா தரப்பில், அறநிலையத்துறை அதிகாரிகள் புகார்கள் அனைத்தும் செவி வழி செய்திதான் என்றும் பெரியார் சிலை உடைக்க வேண்டும் என்று பதிவிட்டதற்கு ஆதாரங்கள் எதுவும் சேகரிக்கப்படவில்லை என்றும் வாதிடப்பட்டது. மேலும், எம்.பி. கனிமொழி மீதான கருத்து அரசியல் ரீதியான கருத்து என்றும், அதிலும் அவர் புகார் அளிக்காத நிலையில் 3ஆம் நபர் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் வாதிடப்பட்டது.

இதற்கிடையே, எச்.ராஜாவின் கருத்து தனிப்பட்ட நபர்களை மட்டுமின்றி, அனைவரையும் பாதிக்க கூடிய வகையில் உள்ளது. பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் பேசி உள்ளதால், நீதிமன்றமே தன்னிச்சையாக வழக்கு தொடர முடியும் என்று சுட்டிக்காட்டிய காவல்துறை, வழக்குகளை ரத்து செய்ய எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்குகளை ரத்து செய்யக்கோரி எச்.ராஜா தாக்கல் செய்த அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தார். பல்வேறு காவல்நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்குகளை ஒன்றாக சேர்த்து, 3 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

Chella

Next Post

கணவனுக்கு செய்த பச்சை துரோகம், கண் முன்னே உல்லாசம் நேரில் பார்த்த மாமனார்….! இறுதியில் கள்ளக்காதலனுக்கு நேர்ந்த கொடூரம்….!

Tue Aug 29 , 2023
மாமனார் கண் முன்னே கள்ளக்காதலனோடு, உல்லாசமாக இருந்த மருமகள், கள்ளக்காதலனுக்கு நேர்ந்த கதியை பார்த்து, கிணற்றில் குதித்து, தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே கீழக்கலங்கல் இந்திரா காலனி சேர்ந்தவர் கனகராஜ் (25). இவருக்கும், கருத்தானூரை சேர்ந்த கனகராஜின் அத்தை மகளான கவிக்குயில் (22) என்பவருக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதில் ஒரு ஆண் […]

You May Like