fbpx

தமிழகமே..! வழிகாட்டி மதிப்பு உயர்வுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு..!

5 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த அதே வழிகாட்டி மதிப்பை மீண்டும் பின்பற்ற வேண்டும் என்று நடைமுறைப்படுத்தப்பட்டதை வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டதாக வேண்டுமென்றே திரித்து தவறான தகவல் பரப்பப்பட்டது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கடந்த 01.04.2012 முதல் 08.06.2017 வரை நடைமுறையில் இருந்து வந்த வழிகாட்டி மதிப்புகள் கடந்த 09.06.2017 முதல் தமிழ்நாடு முழுவதும் ஒரே சீராக 33 % குறைக்கப்பட்டது. வழிகாட்டி மதிப்பு சந்தை மதிப்பை விட மிகவும் குறைவாக இருந்து வந்த காரணத்தினால் கடந்த 01.04.2023 அன்று வழிகாட்டி மதிப்பானது 08.06.2017 வரை பின்பற்றப்பட்டு வந்த அதே மதிப்பிற்கு மீள மாற்றப்பட்டது.

5 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வந்த அதே வழிகாட்டி மதிப்பை மீண்டும் பின்பற்ற வேண்டும் என்று நடைமுறைப்படுத்தப்பட்டதை வழிகாட்டி மதிப்பு உயர்த்தப்பட்டதாக வேண்டுமென்றே திரித்து தவறான தகவல் பரப்பப்பட்டது. மேலும் , இதனை எதிர்த்து கட்டுமான நிறுவனத்தினரால் தொடரப்பட்ட வழக்கில் மேற்படி வழிகாட்டி மதிப்பு மாற்றம் குறித்த பதிவுத்துறை தலைவரின் சுற்றறிக்கையை இரத்து செய்து ஆணையிடப்பட்டது.

மேற்படி உத்திரவினை எதிர்த்து தமிழக அரசால் மேல்முறையீடு செய்யப்பட்டது . மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்ற மேற்படி மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் மேற்படி ஆணைக்கு 15.02.2024 அன்று இடைக்கால தடை உத்திரவு வழங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஸ்டாலினுக்கு சவால் விட்ட அண்ணாமலை!... மத்திய அரசு நிதி குறித்து பேரவையில் பேசுவாரா?

Sat Feb 17 , 2024
மத்திய அரசு நிதி வழங்கவில்லை என மறுத்து சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசுவாரா என நான் சவால் விடுகிறேன் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: பிரதமர் தமிழகம் வருவது உறுதி, அரசு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்க உள்ளதால் அதற்கான தேதி இன்னும் ஓரிரு நாட்களில் இறுதி செய்யப்படும். அவர் வருவதற்கு முந்தைய தேதியில் ‘என் மண் என் மக்கள்’ […]

You May Like